திராவிட கட்சினருக்கு தென்இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் நிறுவன தலைவர் திருமாறன் ஜி சவால்

முகநூல் பக்கத்தில் தென்இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் நிறுவன தலைவர் திருமாறன் அவர்கள் ஆம்பளையா இருந்தா மதுரையில திராவிட கழகத்தினர் முடிந்தால் ஒரு மாநாடு நடத்துங்கடா பார்ப்போம் என்று பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

கந்த சஷ்டி கவசத்தை அவதூறு பரப்பிய கறுப்பர் கூட்டம் பிரச்சனையின் போது எனக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் பத்து நாட்களுக்கும் மேல் இருந்ததாகக் கூறிய தென்இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் நிறுவன தலைவர் திருமாறன் ஜி, நான் அப்போது வெளியில் இருந்திருந்தால் கறுப்பர் கூட்டம் சுரேந்திரனை நார் நாராக கிழிச்சிருப்பேன் என்றும், ஏன்டா உங்களை கேட்க ஆள் இல்லை என்று ஆட்டம் போட்டு கொண்டுயிருக்கீர்களா என்றும்,

தென் மாவட்டத்தில் உங்களை மேடை போட முடியாதவாறு ஏற்படுத்தி வைத்திருக்கோம். திராவிட கழக கட்சி காரனுக்கு சவால் விடுகிறேன், ஆம்பளையா இருந்த மதுரையில் ஒரு மாநாடு நடத்துங்கடா. அப்படி நடத்தினால் 1971 ஆம் ஆண்டு மூக்கையா தேவர் என்ன செய்தாரோ அதை இந்த திருமாறன் உறுதியாக செய்வேன், என சவால் விடுத்து மூக்கையா தேவரைச் சுட்டிக்காட்டியுள்ளார். ராமானுஜரை விடவா பெரியார் ஈ வே ராமசாமி சமூக நீதி பேசிவிட்டார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சிவகுமார், அவர்ருடைய மகன்கள் சூர்யா, அவர் தம்பி கார்த்தி ஆகியோர் மும்மொழி கல்வியை எதிர்ப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அவர் வீட்டு பிள்ளைகளுக்கு ஆறு மொழிகள் தெரியும் என்கிறார்கள். இது என்ன உங்க வீட்டில் உள்ளவர்கள் அனைத்தையும் கற்று கொள்ள வேண்டும் மற்றவர்கள் கற்று கொள்ள கூடாதா? மேலும் தொடர்ந்து இந்துக்களுக்காக, தேசத்துக்கு ஆதரவாக யார் பேசினாலும் அவர்களை பாஜகவினர், சங்கிகள், என்று ஒரு தகவலை சிலர் பரப்பி வருகின்றனர். தர்மங்கள் அழியும் போது, அதர்மங்கள் நிலைநாட்டும் பொழுது, சில அவதாரங்கள் உருவாகும் அந்த அவதாரம் தான் மாரிதாஸ் என்று கூறிய திருமாறன் ஜி,

திமுக என்ற ஒரு மாயையை உடைத்து, திமுக மற்றும் திக முகத்திரையை கிழித்து தோலுரித்துக் காட்டியவர் மாரிதாஸ். இதற்காக அவர் தொடர்ந்து மிரட்டப்பட்டு வருகிறார். மதுரையில் திமுகவினரால் மாரிதாஸ் அவர்கள் மிரட்டப்படுகிறார். உங்களால் என்ன செய்ய முடியும், தேசத்திற்காகவும், இந்துக்களுக்காகவும் குரல் கொடுக்கும் மாரிதாஸ் அவர்களுக்கு பசும்பொன் முத்துராமலிக்க தேவர் வழியில் வந்த எங்கள் தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி பாதுகாப்பாக இருக்கும் என்றும் தெரிவித்தார் திருமாறன்.

மாரிதாஸ்க்கு கேட்க ஆள் இல்லை என்று யாரும் நினைக்க கூடாது, இந்த தேசத்துக்காக யார் குரல் கொடுத்தாலும் அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம். மாரிதாஸ் அவர்கள் நியூஸ் 18 தலைமை செய்தியாளர் குணசேகரன் மீது திமுக வுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று குற்றச்சாட்டு வைத்தார். ஆனால் அது நிரூபணம் செய்வது போன்று நியூஸ் 18 தொலைக்காட்சியில் இருந்து விலகி திமுக குடும்ப நிறுவனமான சன் நியூஸ் தொலைக்காட்சியில் பணிக்கு சேர்ந்துள்ளார் குணசேகரன் எனவும் திருமாறன் ஜி அவர்கள் குறிப்பிட்டார்.

Exit mobile version