ரஜினி மீது நமக்கு ஒரு இனம் தெரியாதபற்று ஏற்பட காரணம் அவர் சனாதன த ர்மத்தின் வழி நிற்பதோடு அல்லாமல்அதனை வழி நடத்தவும் செய்கிறார் .இரண்டு ஆண்டுகளுக்கு முன் தன்னுடையரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த பொழுது பெண் ரசிகைகளுக்கு மனுஸ்மிருதியை ரஜினி வழங்கியதை பார்க்கும் பொழுது ரஜினியின் ஆன்மீக அரசியலின்அடையாளம் தெரிந்தது.
தன்னை சந்திக்க வந்த ரசிகைக் குரஜினி மனுஸ்மிருதியை அளித்த பொழுதே மனு சாஸ்திரம் கூறும் பெண்களின் உயர்ந்த நிலையை தன்னுடைய ரசிகை களும் உணர வேண்டும் என்று ரஜினிவிரும்புவது புரிகிறது.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெண்ணை போற்றி வணங்கி வழிபடவேண்டிய அவசியம் பற்றி மனுஸ்மிரிதிஎன்ன கூறுகிறது என்று பார்ப்போம்.உபாத்யாயாந் தஷாசார்யா ஆச்சர்யாணாம் ஷதம் பிதா சஹஸ்ரம்து பித்ருநாத்மா கெளரவேணாதி ரிச்யதே’ஆச்சார்யரைவிட தந்தை நூறு மடங்கு உயர்ந்தவர், தந்தையைவிட தாய் ஆயிரம் மடங்கு உயர்ந்தவர், என்கிறது மனுஸ்ம்ரு தி.இதோடு மட்டுமல்ல, தந்தையுடன் பிறந்தவள், பெரிய தாய், தமக்கை ஆகியோரி டம் தாயிடம் காட்டுவது போன்ற கெளரவ த்தைக்காட்ட வேண்டும். இவர்கள் அனை வரை விடவும் தாய் பூஜிக்கத்தக்கவள் என்றும் தாயைப் பெருமைப்படுத்துகிறது.
திருமணம் குறித்து மனு சொல்வதைப் பார்த்தால், நம் தேசத்தில் பெண்களுக்கு இருந்த மரியாதையை அறியலாம். பெண்ணுக்கு ஏற்ற மணமகனை தந்தை உரிய காலத்தில் கண்டு அவளுக்கு மணம் செய்விக்க வேண்டும். அப்படி தந் தை செய்யாதபோது, தானே தன் துணையை பெண் தேடிக் கொள்வதற்கான உரி மை கொண்டவர்.
மணம் முடித்தவர் அண்ணன் மனைவியின் பாதங்களில் அன்றாடம் விழுந்து வணங்க வேண்டும்; அவர் தாய்க்குச் சமமானவர்.மணம் புரிந்த பெண்ணிடம் இடையறாத அன்புடன் அவளோடு கூடி வாழ வேண்டு ம் என்று ஆணுக்கு அறிவுறுத்தும் மனு பெண்ணின் கைகளில் குடும்பம் பேணு வதற்கான பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.பிள்ளை பெறுபவளும் பெண்தான் பெற்ற பிள்ளைகளை பேணி வளர்ப்ப வரும் பெண்தான்; ஒரு குடும்பத்தை கட்டுக்கோப்பாக நடத்திச் செல்பவர்களும் பெண்கள் தான்; உலக வாழ்க்கையின் அஸ்திவா ரமே பெண்கள்தான்.உத்பாதநமபத்யஸ்ய ஜாதஸ்ய பரிபால னம் ப்ரத்யஹம் லோகயாத்ராயா: ப்ரத்ய க்ஷம் ஸ்திரி நிபந்தநம்உத்பாதநமபத்ய ஸ்ய ஜாதஸ்ய பரிபாலனம்..ப்ரஜநார்தம் மஹாபாஹா: பூஜாஅர்ஹா கிருஹ தீப்தய:ஸ்த்ரிய: க்ஷியஷ் ச கேஷேஷுந விசேஷா அஸ்தி கஷ்சந’
அதாவது, வீட்டை விளங்கச் செய்து சந்த திகளை உருவாக்குவது பெண்களே எ ன்பதால் அவர்கள் மிகவும் போற்றுதலு க்குரியவர்கள். அவர்கள் வீட்டில் இரு க்கும் லக்ஷ்மிகள். இதற்கு மேல் அவர்க ளைப் போற்ற வார்த்தைகள் ஏது என்று மலைத்துப் போகிறது; இத்தகைய பெரு மை மிக்க பெண்களைக் கொண்டாடச் சொல்கிறது மனுஸ்மிருதி. பெண்களுக்கு சொத்துரிமையை உறுதி செய்கிறது.
பெண் சீதனமாகக் கொண்டு வந்த சொத்தை அழிக்க ஆணுக்கு உரி மை இல்லை. அந்தச் சொத்தினை தான் விரும்பியபடி நிர்வகித்துக் கொள்ளும் உரிமை பெற்றவர் பெண். அத்துடன் பெண்களுக்கும் பெற்றோரின் சொத்தில் பங்கு உண்டு என்கிறது மனுஸ்மிருதி.,மகிழ்ச்சியில்லாத மனைவி இருக்கிற குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்காது’ என்கிறது. பெண்கள் மதிக்கப்படுகின்ற குடும்பங்களிலும் சமுதாயத்திலும்தான் சிறந்த மனிதர்கள் தோன்றுவார்கள்;பெண்களை மதிக்காத சமுதாயத்தில் நல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டாலும் அவற்றால் பயன் விளையாது என்றும் அறிவுறுத்துகிறது. பிறந்த வீடும் புகுந்த வீடும் அவளை மகிழ்ச்சியோடு வைத்துக் கொள்ள வேண்டியது கட்டாய ம்; இல்லையேல் குலம் நசிந்து போகும் என்றும் எச்சரிக்கிறது.
பெண்ணைக் காக்கத் தவறும் தந்தை, கணவன், மகன் இவர்கள் பாவிகள் என்றும் வசைபாடுகி றது.பெண்ணின் மீது அபாண்டமாகக் குற்றம் சுமத்தி அதை நிரூபிக்கத் தவறுவோருக்கு தண்டனை விதிக்கப்படும். அதோடு மட்டுமல்லாது கற்புடைய அப்பாவியான பெண்ணைக் கடத்திச் செல்பவருக்கு மரண தண்டனையை உறுதி செய்கிறது மனுஸ்ம்ருதி. குற்றங்களுக்கான தண்ட னைகளை நீதி நூல் வகைப்படுத்திக் கூறும்போது, குற்றம் இழைக்கும் பெண்க ளுக்கும் தண்டனைகளை விதித்திருக்கிறது.
இதை மட்டும் எடுத்துக் கொண்டு பெண் இழிவு படுத்தப்பட்டதாகக் கூறுவது அறிவுடை மையாகாது. ஓர் ஆணுக்குச் சந்ததி இல்லாமல் மோட்சம் இல்லை என்றும், தவங்களால் தான் ஆண் மோட்சம் அடைகிறான் என்றும் மனுஸ்மிருதி அதே நேரத்தில் பெண்ணைப் பொருத்தவரை சந்ததி அற்றவராக இருந்தாலும் தன் கடமைக ளில் தவறாது நேர்மையுடன் வாழ்ந்திரு ப்பாரானால் அவர் மோட்சம் அடைகிறார் என்று பெண்களை உயர்த்தியே பேசுகிறது மனுஸ்மிருதி.
அதனால் தான் மனுஸ்மிருதி கூறும் வழியில் பெண்களை பெருமை படுத்தி தானும் வாழ்ந்து தன்னுடைய ரசிகர்களை யும்வழி நடத்தி வருகிறார் ரஜினி அவர்கள். ரஜினியை மனிதனாக்கியது அவரது மனைவி தான் என்பதை அவர் பல முறைதன்னுடைய மனைவி பற்றி பொது வெ ளியில் கூறும் பொழுதே மனுஸ்மிருதிஅவரை எப்படி பாதித்து இருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.ஒரு தந்தையாக தன்னுடைய இரண்டுமக்களின் திருமணத்தை நடத்தி அவர்களின்வாழ்க்கை துணையை அவர்களி ன் விருப்பப்படி அமைத்துக் கொடுக்க மிக உயர்ந்த இடத்தில இருந்தும் ரஜினி பட்ட கஷ்டங்களை பார்க்கும் பொழுதுமனு ஸ்மிருதியின் வழியில் பெண்களைஉரிய காலத்தில் திருமணம் செய்து வைத்த தந்தையின் கடமையை நிறைவேற்று யது தான் தெரிகிறது..
இதெல்லாம் பல பெண்களை திருமணம்செய்து அவர்கள் வழியில் பெண்களைபெற்றாலும் அவர்களையும் போகப்பொருளாக நினைக்கும் கமல் மாதிரி திராவி ட கூட்டத்திற்கு எப்படி புரியும்?சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ்ரிக் வேத த்தில் வரும் தஸ்யூக்கள் என்கிற ஒரு வார்த்தைக்கு உங்களால் பொருள் கூற முடியுமா? இது என்னவென்று உங்களுக்கு தெரியுமா?
இதில் எங்கே திராவிடர்என்று இருக்கிறது?தஸ்யூக்கள் என்றால் தவறு செய்பவர்களைப்பற்றி கூறப்பட்ட வார்த்தை. அதைஒரு இன அடையாளமாக உருவாக்கிஇந்தியர்களை இன ரீதியாக பிரித்துகிறிஸ்தவ மதத்தை பரப்ப ஆங்கிலேய ர்கள் உருவாக்கிய சதி திட்டம் தான் ஆரியதிராவிட போராட்டம்.இதற்காக தான் சமஸ்கிருத மொழி ஆ ராய்ச்சி என்கிற பெயரில் மாக்ஸ்முல்லர்இந்தியாவுக்கு வந்தார்.அடுத்து தமிழைஆய்வு செய்ய கால்டுவெல் வந்தார்.இவர்களின் நோக்கம் மதமாற்றமே..
இவர்கள்விட்டுப்போன விதைகள் தான் திராவிடஇயக்க அரசியல்.தமிழகம் இந்துத்வா அரசியலை நோக்கிநகர ஆரம்பித்து விட்டது. அதனால் அத ற்கு தடை போட நினைத்து மனுஸ்மிருதிபெண்களை அவமானப்படுத்தியது எ ன்று திருமாவளவன் வகையறாக்கள் வந்து நிற்பது தெருவில் நிற்கும் இந்து த்வா தேரை ஊர் கூடி இழுத்து நிலையம்சேர்க்க துணை நிற்கும் .
கட்டுரை:- எழுத்தாளர் விஜயகுமார் அருணகிரி.