திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்’ என்ற தலைப்பில் பேராசிரியர் தெய்வநாயகம் என்பவர் எழுதிய புத்தகம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதைப் பெற்றுக் கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ‘திருவள்ளுவர் ஞானஸ்தானம் பெற்றவர். அவர் கிறிஸ்துவராக இருந்து தான், திருக்குறள் எழுதியதாக நுாலாசிரியர் பெரியநாயகம் தன்னுடைய நுாலில் குறிப்பிட்டிருக்கிறார். அது ஆய்வுக்குரியது தான்’ என பேசினார். இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
‘திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு நிகழ்வு’ என பா.ஜ.,வினர் குற்றம் சாட்டுகின்றனர். இதை, ஒரு சிலர் திட்டமிட்டு செய்வதற்கு காரணம், அமைச்சர் தங்கம் தென்னரசு என ஒரு தகவலும் பரவுகிறது. இதில் தங்கம் தென்னரசு எங்கேயிருந்து வருகிறார் என கேட்டால், ‘கோவில்களில் தேவாரம், திருவாசகம் படிப்பது போல, திருக்குறளையும் படிக்கச் செய்ய ஏற்பாடு செய்யப்படும்’ என தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராகவும் இருக்கும் தங்கம் தென்னரசு கருத்து தெரிவித்திருந்தார். இப்படி, ஹிந்து கோவில்களில் திருக்குறளை படிக்க வைத்து விட்டால், திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை பிராமணராக்க முயல்வர். அதை அடிப்படையிலேயே தகர்க்க வேண்டும் என முடிவெடுத்துத் தான், பெரியநாயகத்தை வைத்து, திருவள்ளுவரை கிறிஸ்துவராக உருவகப்படுத்தும் போக்கு திடுமென துவங்கி இருக்கிறதாம் !
தகவல் தினமலர்.