பந்தங்களே… அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே….. அன்பானவர்களே! சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சுமார் 100 குடும்பத்தைச் சேர்ந்த நரிக்குறவ இனத்தைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுப்பதற்காக மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வந்திருக்கிறார்கள்.
மற்றவர்களுக்கெல்லாம் இருக்கைகள் கொடுத்து அமரச் சொன்ன அதிகாரிகள் நரிக்குறவ இனத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் இருக்கை கொடுக்காமல் தரையில் அமரச் சொல்லி இருக்கிறார்கள். பெண்கள் கைக்குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து இருக்கிறார்கள். அரசு அலுவலகத்தில் கடைபிடிக்கப்பட்ட இந்த பாகுபாடு, திராவிட மாடல் என்று சொல்லிக் கொள்ளும் ஆளும் கட்சியின் சமூகநீதிக் கோட்பாட்டை கேள்விக்குறியாக்கி உள்ளது.சாதிகள் அழிக்கப்பட்டதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் திராவிட மண்ணில் காட்டப்பட்ட இந்த சாதிப் பாகுபாடும் சாதிக் கூத்தும் திமுகவின் போலி முகத்தை தோலுரித்துக் காட்டுகிறது.நரிக்குறவர் வீட்டிற்கு வந்திருப்பவர் அங்கிருக்கும் புத்தம்புது தட்டிலே எடுத்துவரப்பட்ட புத்தம் புதிய டம்ளரில் மினரல் வாட்டர் குடித்து திடீரென்று நுழைந்த வீட்டில் திறமையாக போட்டோ படமெடுத்து நரிக்குறவர் வீட்டில் உணவருந்தி விளம்பரப்படுத்திக் கொள்கிறார் முதல்வர். சமூக நீதியை விளம்பரத்திற்கு மட்டுமே பயன்படுவதுதான் இவர்களின் சமூக நீதி.
இவர்களின் உள்ளத்தில் இருக்கும் உண்மையான சமூக நீதி, இவர்கள் ஆட்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிகழ்த்திக் காட்டப்பட்டிருக்கிறது.வார்த்தைக்கு வார்த்தை சமூக நீதியையும் சாதி மறுப்பையும் வார்த்தெடுத்த மண் தமிழ் மண் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் திராவிட மாடல் ஆட்சியில், பழங்குடியின மக்களுக்கு ஒரு சாதா நாற்காலியை தரக்கூட இவர்களுக்கு மனமில்லை.ஆனால் தன்னை சமூகநீதிக் காவலர் ஆக அடையாளப்படுத்தாத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பழங்குடி இனத்தின் மலைசாதி மங்கைக்கு, சாதாரண நாற்காலி அல்ல ஜனாதிபதியின் நாற்காலியையே தந்து கௌரவப்படுத்தி இருக்கிறார்.இப்போது சொல்லுங்கள் திராவிட மாடலில் உதட்டில் மின்னுகிறது சமூக நீதி…பாஜகவினருக்கு உள்ளத்தில் விதைக்கப்பட்டிருக்கிறது சமூகநீதி…இது ஏதோ முதல்முறை தெரியா மல் நடந்த சம்பவமாக நான் கருதவில்லை. கடந்த ஆண்டு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பொன்னம்பலம் கிராமத்தில் மழையால் சேத மடைந்த தடுப்பணைகளை பார்வையிடுவதற்காக திமுக எம்எல்ஏ விஸ்வநாதன் சென்றிருந்தார் .
பாதையில் சேறும் சகதியும் இருந்ததால் தன் செருப்பை கழற்றி விட்டு எம்எல்ஏ நடக்க, தலித் சமுதாயத்தைச் சேர்ந்த வெங்கடசமுத்திரம் ஊராட்சி திமுக செயலாளர் சங்கர் எம்எல்ஏவின் செருப்பை தூக்கிச் சென்றார். அங்கே தெரிந்தது சமூக நீதி…!!!கடந்த மார்ச் மதம் முதுகுளத்தூர் BDO ராஜேந்திரன் என்பவரை அவரின் சாதியைச் சொல்லி தரக்குறைவாக திட்டியதாக வந்த புகாரை அடுத்து அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு இலாகா மட்டும் மாற்றம் செய்யப்பட்டது. பட்டியல் இன மக்களை அவமரியாதை செய்த அமைச்சர் மீது எந்த சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அங்கே தெரிந்தது சமூக நீதி…!!!இதே அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்களின் பிறந்தநாளன்று சந்திக்கச் சென்ற விசிக தலைவர் தொல் திருமாவளவன் அவர்களை, தான்சொகுசு சோபாவில் அமர்ந்திருந்தும், விசிக தலைவரை பிளாஸ்டிக் நாற்காலியில் அமரச் செய்தது, சமூக ஊடகத்தில் பெருத்த சர்ச்சையானது. அங்கே தெரிந்தது சமூக நீதி…!!!ஜூலை 2021 சாக்கோட்டை அன்பழகனை சந்திக்கச் சென்ற விசிக தலைவர் திருமாவளவன் சாதாரண பிளாஸ்டிக் நாற்காலியில் அமர வைக்கப்பட்டு இருந்தார். ஆனால் எம்எல்ஏ சொகுசு நாற்காலி யில் அமர்ந்திருந்தார் அங்கே தெரிந்தது சமூக நீதி…!!!
ஏன் இன்றும் கூட முற்போக்கு கூட்டணியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் யஸ்வந்த் சின்ஹா அவர்களுக்கு மனு தாக்கல் செய்யச் சென்றிருந்த விசிக தலைவர் தொல் திருமாவளவனுக்கு இருக்கைக்குக்கூட இடமளிக்காமல் பின்னர் கடைசியாக நிற்க வைத்தது, சமூக ஊடகத்தில் வைரலாகிறது. அங்கே தெரிந்தது சமூக நீதி…!!!திராவிட மாடலில் எப்படி தமிழ் மொழி அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுகிறதோ? அதே போல சமூக நீதியும் ஓட்டுகளை வாங்குவதற்குப் பயன்படும் நல்ல கருவியாக திமுகவுக்கு பயனளிக்கிறது.சாதியைப் பற்றியும், மதங்களைப் பற்றியும், சமூகநீதி பற்றியும், அதிகம் பேசும் திராவிட மாடல் போலியானது என்பது மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகிறது.
நன்றி வணக்கம் !அன்புச் சகோதரன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவு.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















