வேலூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் கதிர் ஆனந்த். இவர், தி.மு.க. பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் மைந்தன். திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயத்தில் தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.பி. கதிர் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், தி.மு.க.வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், அரசு உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர். ஆனால், பட்டியல் சமூகத்தை சேர்ந்த பேரூராட்சி தலைவரை மட்டும் மேடையில் அமர அனுமதிக்காமல் புறக்கணித்து இருக்கின்றனர்.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த பேரூராட்சி தலைவரும், அவரது ஆதரவாளர்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதுகுறித்தான, காணொளியை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார். அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பட்டியல் சமூகத்தின், உண்மையான பாதுகாவலர்கள் நாங்கள் தான் என மேடைதோறும் தி.மு.க. தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால், அதே கட்சியில் இருக்கும் பட்டியல் சமூக தலைவர்களுக்கு தி.மு.க.வினர் என்ன? மரியாதை கொடுத்து வருகின்றனர் என்பதற்கு இந்த காணொளியே சாட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















