தமிழக பாஜக சார்பில் மண்டல வாரியாக மாநாடு நடத்தப்படும் என கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார்.அதன்படி முதற்கட்ட மாநாடு நெல்லை, வண்ணாரப்பேட்டையில் வரும் 22ம் தேதி நடக்க உள்ளது.
இதற்கான அனைத்து பணிகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மாநாட்டில் பங்கேற்கும் மத்திய அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வருவார் எனவும் பின்னர் அங்கிருந்து நெல்லைக்கு வருகை தரும் அவர், மாலை 6 மணி அளவில் மாநாட்டு திடலுக்கு வருகை தர உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பின்னர் இரவு 8 மணிக்கு மாநாட்டு மேடையில் உரையாற்றும் அமித்ஷா தமிழகத்தின் அரசியல் நகர்வுகள் உள்ளிட்டவை குறித்து பேசுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்தப் பயணத்தின் போது அமித்ஷா , அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியைச் சந்திப்பார் என்று தெரியவில்லை என்றாலும்,மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை (NDA) ஒருங்கிணைப்பது குறித்த விவாதங்கள் மாநிலத் தலைவர்களுடனான அவரது ஆலோசனைகளின் முக்கிய பகுதியாக இருக்கும் என்றும் அதேபோல் தமிழத்தை ஆளும் திமுக அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடத்துவது,தமிழகத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்தும் முக்கிய ஆலோசனை நடத்தப்படும் எனவும் பாஜக தலைவர்கள் பேசிவருகின்றனர்.
கூட்டணியை வலுப்படுத்துதல்,தேர்தல் உத்திகளை மேம்படுத்துதல் மற்றும் உள்ளூர் அரசியல் சவால்களை எதிர்கொள்வது ஆகியவை குறித்து ஆலோசனை நடைபெறும் என்கின்றனர் .
இதற்கிடையில்,பாஜக தேசிய பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் தமிழகத்திற்கு வருகை தந்து கட்சியின் முன்னேற்றத்தை ஆய்வு உள்ளார்.அவரது வருகை,கட்சியின் வலிமையை விரிவுபடுத்துதல் மற்றும் அடிமட்ட அளவில் அதிக ஒருங்கிணைப்பை உறுதி செய்தல் குறித்த வழிகாட்டுதலை வழங்குவதன் மூலம் அமித்ஷாவின் முயற்சிகளை நிறைவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால்,பாஜக தலைமை தனது ஆதரவுத் தளத்தை விரிவுபடுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது, குறிப்பாக கட்சி அதிக இடத்தைப் பெறுவதற்காக கருதப்படும் தென் மாவட்டங்களில்.மண்டல மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பது,கட்சி தலைமை தமிழத்தின் மீது முக்கிய கவனம் செலுத்துவதாக கூறப்படுகின்றது .
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















