அரபிக் கடலில் கடற்கொள்ளையர்கள் கொள்ளை சம்வங்களில் அடிக்கடி ஈடுபட்டு வருகிறார்கள்.. சில வாரங்களுக்கு முன்னர் மால்டோவா நாட்டுக்கு சொந்தமான எம்வி ருயின் என்ற சரக்கு கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. இந்த சரக்கு கப்பலில் 18 மாலுமிகள் பயணித்தனர்.
இந்த கப்பல் கடத்தப்பட்ட போது ஏடன் வளைகுடாவில் இந்திய போர் கப்பல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தது. இதனையடுத்து எம்வி ருயின் சரக்கு கப்பலை மீட்க போர்க் கப்பல்களும் விமானங்களும் களத்தில் இறங்கின. ஐரோப்பிய யூனியன் கடற்படையும் இணைந்து கொண்டது. இந்த கடத்தலின் போது படுகாயமடைந்த மாலும் ஒருவரை இந்திய கடற்படை மீட்டது
இந்த நிலையில் சோமாலியா அருகே 15 இந்தியர்களுடன் சரக்கு கப்பல் ஒன்று கடத்தப்பட்டது . மத்திய ஆப்ரிக்காவைச் சேர்ந்த சோமாலியாவின் கடற் பகுதியில் MV LILA NORFOLK என்ற சரக்கு கப்பல் நேற்று மாலை கடத்தப்பட்டதாகவும் கொள்ளையர்களால் இந்த கப்பலில் 15 இந்தியர்கள் இருப்பதாக தகவல் வெளியானது அடையாளம் தெரியாத 5 முதல் 6 பேர் வரையுள்ள நபர்கள், ஆயுதங்களுடன் வந்து கப்பலை கடத்தியதாக தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து அதிரடிக்கு தயாரான இந்திய கடற்படை உடனடி பதில் நடவடிக்கையை எடுத்தது. கடத்தப்பட்ட சரக்குக் கப்பல் இருக்கும் இடத்தை நோக்கி இந்திய கடற்படை விமானம் அனுப்பப்பட்டது. அதோடு, கடற்பாதுகாப்புக்கு உதவும் ஐஎன்எஸ் சென்னை என்ற போர்க் கப்பலும் திருப்பிவிடப்பட்டது
இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். சென்னை கப்பல் சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலை நெருங்கியது. தாக்குதலுக்கும் தயாரானது இந்திய கடற்படை.கப்பலை விட்டு கொள்ளையர்கள் வெளியேற ஹெலிகாப்டர் மூலம் இந்திய கடற்படையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்திய கடற்படை கமாண்டோக்கள் கடத்தப்பட்ட கப்பலுக்குள் நுழைந்து கடத்தப்பட்ட இந்தியர்களை பத்திரமாக மீட்டனர். கொள்ளையர்கள் தப்பியோடினர். கப்பலில் இருந்த 15 இந்தியர்கள், 6 பிலிப்பைன்ச் நாட்டைச் சேர்ந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
முழுமையான சோதனைக்குப் பிறகு கப்பல் தற்போது புறப்பட்டது என இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.