தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்குச் சுழற்சி காரணமாக ஒரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்.
வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் வெப்பம் அதிகரித்துக் காணப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் குமரிக்கடல், மாலத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் மீனவர்கள் அடுத்த 48 மணி நேரத்திற்கு அப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுத்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்.
அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதால் அரபிக்கடல் பகுதிகளுக்கு வரும் 31-ம் தேதி முதல் ஜூன் 5-ம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளார்.