சென்னையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங், வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து எதிர்க் கட்சிகளும், கூட்டணிக் கட்சிகளும் திமுக ஆட்சியின் மீதும், காவல்துறையின் நடவடிக்கை தொடர்பாகவும் விமர்சனத்தை முன்வைக்கத் தொடங்கின.இதில், திமுகவின் கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி, கடுமையான நிலையெடுத்து பேச தொடங்கியது. கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை சில மணி நேரங்களில் கைது செய்துவிட்டோம் என்று காவல்துறை தெரிவித்த போது, கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி அதனை உடனடியாக மறுத்தார்.
“கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை” என்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை முன்பகை காரணமாக ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரியவந்துள்ளது.
பாஜகவிற்கு வாய்ப்பளிக்கும் விதத்தில் சிபிஐ விசாரணை கேட்கும் கோரிக்கைக்கு ஆதரவு கொடுத்துள்ளது. ஏற்கனவே கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் அதிமுகவும், பாஜகவும் சிபிஐ விசாரணை கேட்டு போராடுகின்றன. இப்போது அந்த வரிசையில் விசிகவும் இணைந்துள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இயக்குநரும், ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பருமான இயக்குனருமான பா ரஞ்சித் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பான அவரது சமூக வலைதள பக்கத்தில் பட்டியலின மக்கள் மீது உண்மையிலேயே திமுக அரசுக்கு அக்கறை உள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பெரம்பூரில் அண்ணனது உடலை அடக்கம் செய்யக் கூடாது என திட்டமிட்டே தடுக்கப்பட்டதாக தெரிகிறது. கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் நிகழ்த்தப்பட்ட நாடகத்தின் முடிவில் விருப்பம் இல்லாமல், சென்னைக்கு வெளியே புறநகர் கிராம பொத்தூர் பகுதியில் அடக்கம் செய்ய நிர்பந்திக்கப்பட்டோம்.
திமுக அரசிடம் அதிகாரம் இருந்தும், நீதிமன்றத்தை நாடச்செய்து, அதில் சட்ட ஒழுங்கு முறைக்குள் இந்த பகுதி அடங்காது என்று, அவர் வாழ்ந்த பெரம்பூரில் அவர் உடலை அடக்கம் செய்ய விடாமல் மிகப்பெரிய வஞ்சக செயலை செய்து இருக்கிறது இந்த அரசு. உண்மையிலேயே உங்களுக்கு தலித் மக்கள் மீதும், தலித் தலைவர்கள் மீதும் அக்கறை இருக்கிறதா என்கிற கேள்வி எழவே செய்யும். என்றும் வெறும் வாக்குகாக மட்டுமே சமூக நீதியா என சரமாரியாக சாடியிருந்தார் பாரஞ்சித்.
இந்நிலையில் பா ரஞ்சித்தின் காட்டமான விமர்சனத்துக்கு, திமுக செய்தித்தொடர்பாளரான சரவணன் அண்ணாதுரை பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், திமுகவை தலித் மக்களின் நலன்களுக்கு எதிரான கட்சி என கட்டமைக்க பாஜக வெகு காலமாக முயன்று வருகிறது. அதிலே படுதோல்வியைத் தான் சந்தித்துக் கொண்டிருக்கிறது, சந்திக்கவும் போகிறது என குறிப்பிட்டுள்ளார்.
ஒடுக்கப்பட்டவர்களின் விடி வெள்ளியாய் செயல்படும் திமுகவின் மீது தலித் மக்களின் நலனுக்கு எதிரானவர்கள் என்ற போலி பிம்பம் இந்த சம்பவத்திற்கு பின்னர் பல மடங்கு வீரியத்துடன் சமூக வலைத்தளங்களில் கட்டமைக்கப்படுகிறதே அது தங்களுக்கு தெரியவில்லையா? அந்த போலி பிம்பத்தை உறுதிப்படுத்தவே இந்த பதிவா? என்றும் பா ரஞ்சித்துக்கு கேள்வி எழுப்பியுள்ளார் சரவணன்.
ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்த தகவல் அறிந்ததும் மருத்துவமனையிலேயே கதறி அழுதார் பா ரஞ்சித். இந்நிலையில் திமுக அரசின் சட்டம் ஒழுங்கை விமர்சித்தும், பட்டியலின மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் ஆளும் திமுக அரசை பா ரஞ்சித் எதிர்க்க தொடங்கியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எப்போதும் பா ரஞ்சித் க்கு உறுதுணையாக இருப்பது திமுக தான் என வெளிவட்டாரங்கள் கூறிவருகிறது.அவரின் படங்களும் திமுகவின் ஆதரவாகத்தான் இருக்கும். இந்த நிலையில் பா ரஞ்சித் திமுகவை எதிர்கேள்வி கேட்டதை தங்கி கொள்ளமுடியாத திமுக பா.ரஞ்சித்தை விமர்சித்துள்ளது பேசுபொருளாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் தற்போது சினிமா துறையினை ஆண்டு வருவது ஒரு தனிநபர் சாம்ராஜ்யம் தான் எனதிரை துறையினர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த தனிநபர் ராஜ்ஜியத்திற்கு எதிராக பேசிய பா. ரஞ்சித்தின் படம் இனி வெளிவருமா இல்லை குரல் நசுக்குப்படுமா என்ற கேள்விகள் மேலோங்கி வருகிறது.