இந்தியாவில் பொழுதுபோக்கிற்க்காக மிக அதிகமாக பயன்படுத்தப்படும் டிக்டாக், ஹலோ, போன்ற மொபைல் செயலிகள் ஆகும். இது ஒருவித கலாச்சார சீர்கேட்டுக்கும் வழிவகுத்தது. மக்களை பைத்தியம் ஆக்கியது , ஆபாசம் நிறைந்த செயலியாக இருந்து வந்தது டிக் டாக். சீனாவுடன் தொடர்புடைய 59 சீனா செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. கடந்த ஜூன் 15-ம்தேதி லடாக் எல்லையில் ஏற்பட்ட பிரச்சனையில் இந்திய இராணுவ வீரர்கள் 20 வீரமரணம் அடைந்தார்கள்.
சீன தரப்பில் 43 பேர் கொல்லப்பட்டனர். மேலும் சீனாவிற்கு பொருளாதார ரீதியில் பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.இது டிஜிட்டல் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்று கூறலாம்.இதனால் டிக் டாகின் தாய் நிறுவனத்திற்கு 45 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது
இதன் தொடர்ச்சியாக தற்போது டிக்டாக் தனது தலைமையகத்தை சீனாவிலிருந்து லன்டனுக்கு மாற்ற முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும், அதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து அரசிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதே போல மற்றொருபுறம் கலிபோர்னியாவில் தனது கிளையை டிக்டாக் மிக சமீபத்தில் திறந்துள்ளது. மேலும், முன்னாள் வால்ட் டிஸ்னி கோ நிர்வாகி கெவின் மேயரை டிக்டோக்கின் தலைமை நிர்வாகியாக டிக்டாக் நியமித்துள்ளது.
பயனர்களின் தரவை மாற்ற சீனா நிறுவனத்தை கட்டாயப்படுத்தக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் டிக்டாக் வாஷிங்டனில் கடுமையான ஆய்வை எதிர்கொள்கிறது. டிக்டோக் சீனாவை தளமாகக் கொண்ட பைட் டான்ஸுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.அமெரிக்காவில் தற்போது சந்தித்து வரும் பிரச்னைகளில் டிக்டாக் கவனம் செலுத்தி வருகின்றது.
முன்னதாக பிரிட்டனில் உலகளாவிய தலைமையகத்தைத் திறக்க இங்கிலாந்து அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளை டிக்டாக் முறித்துக் கொண்டத்து தற்போது சீன மீது பல்வேறு நாடுகள் கோபத்தில் இருப்பதால் அங்கிருந்து லண்டன் செல்ல தயாராகி வருகிறது. டிக் டாக் நிறுவனம் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.