திருக்கோவிலூரில் திமுக வேட்பாளர் பொன்முடி வெற்றி பெற்றால் இடைத்தேர்தல் வரும்; பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன்

திருக்கோவிலூரில் திமுக வேட்பாளர் பொன்முடி வெற்றி பெற்றால் இடைத்தேர்தல் வரும்; பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் பேட்டி.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் VAT. கலிவரதனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் பின்னர் செய்தியாளர்கள் சந்தித்தார்.

திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிடும் பொன்முடியை இந்துக்களுக்கு எதிரானவர் மட்டுமல்ல இயற்கை வளங்களை கொள்ளையடித்து அதன் காரணமாக பல்வேறு வழக்குகளை சந்தித்து கொண்டிருக்கிறார் எனவும், செம்மண் குவாரியில் பல்வேறு ஊழல்களை செய்து மலைகளை அழித்து பல்வேறு சட்டத்திற்குப் புறம்பான குவாரிகளை நடத்தி வருகிறார் என்றும், கனிமவளக் கொள்ளை அடித்ததாக இவர் மீது வழக்கு பதிவாகி உள்ளது எனவும், பொன்முடி அமைச்சராக இருந்த பொழுது சைதாப்பேட்டையில் உள்ள நீதிமன்றத்திற்கு பின்னால் இருக்கக்கூடிய அரசு நிலங்களை வளைத்து நில அபகரிப்பு செய்ததன் மூலம் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இந்த வழக்கானது சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தனி நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது என்றும், அதற்கான தீர்ப்பு விரைவில் வரும் என்றும் உறுதியாக பொன்முடி தண்டிக்கப்படுவார் என்றும், அப்படிப்பட்ட சூழ்நிலையில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் பொன்முடி வெற்றி பெற்றால், குறைந்தபட்சம் ஆறு மாதத்திற்குள் அல்லது ஒரு வருடத்திற்குள் கட்டாயம் இடைத்தேர்தல் வரும் என்றும், ஏனெனில், உறுதியாக அவர் அந்த வழக்கில் தண்டிக்கப்படுவார் என்றும் கூறினார். மேலும், நில அபகரிப்பு என்பது திராவிட முன்னேற்ற கழகத்தின் பாரம்பரிய சொத்தாக உள்ளது என்றும் அதில் பொன்முடி விதிவிலக்கல்ல என்றும் கூறினார். அதிகாரத்தில் இருக்கும்போது தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தனது மனைவியின் தாயார் பெயரில் பினாமி சொத்துக்களை வாங்கி குவித்ததாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த ஊழல் வழக்கில், பொன்முடிக்கு குறைந்தபட்சம் ஆறு மாத காலம் சிறை தண்டனை வழங்கப்பட்டாலும் கூட அவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என தெரிவித்தார்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version