கைலாயத்தில் லிங்கம் இருப்பதால் கயிலாயம் சிறப்பு. ஆனால், லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு. இந்த மலை மிகப்பெரும் புனிதமாக கருதப்படுகிறது. இதை சிவலிங்கமாக கருதி சித்தர்கள், முனிவர்கள், ஞானிகளெல்லாம் வழிபட்டுள்ளனர்.திருவண்ணாமலை மலையே சிவன்தான்! அங்கு எப்படி கழிப்பிடம் கட்ட அனுமதிக்கலாம்? ஹைகோர்ட் நீதிபதி கண்டனம்திருவண்ணாமலை கிரிவல பாதையில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை வனம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை நியமித்து, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விரிவான அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் அமைந்துள்ள மலையில், கிரிவல பாதையின் இருபுறமும் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றக் கோரி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் லஞ்சம் கொடுத்து, எந்த அனுமதியுமின்றி கட்டப்பட்டுள்ள இந்த கட்டடங்களுக்கு குடிநீர் இணைப்பு, மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.புனிதமான கிரிவல பாதையில் மரங்கள் வெட்டப்பட்டு, கழிப்பறைகளும், செப்டிக் டேங்க்-களும் கட்டப்பட்டுள்ளதாகவும், இந்த சட்டவிரோத செயல்களுக்கு வனத்துறை அதிகாரிகளும், நகராட்சி மற்றும் மின்துறை அதிகாரிகளுமே பொறுப்பு எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் மலைப்பகுதி லே அவுட் ஆகிவிடும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மலைப்பகுதியில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களை அப்புறப்படுத்துவதுடன், அவற்றுக்கான குடிநீர், மின் இணைப்புகளை துண்டிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வு, திருவண்ணாமலை மலையே சிவன் தான் எனவும், அங்கு எப்படி கழிப்பிடங்களும், செப்டிக் டேங்க்-களும் கட்ட அனுமதிக்கலாம் எனக் கேள்வி எழுப்பியது.மேலும், வனத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர் எம்.சி.சுவாமி அடங்கிய குழுவை அமைத்து, மலையில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களை நேரில் ஆய்வு செய்து நான்கு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















