நீலகிரியில் 4 பேரை அடித்து கொன்ற டி 23 புலியை சுட்டு கொல்லதமிழக அரசு உத்தரவு போட்டார்கள். சமூக ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பிலும் கண்டனங்கள் வந்ததை அடுத்து இன்று, அப்படி எந்த உத்தரவும் போடவில்லை என பல்டி அடித்து விட்டார்கள்.
நீலகிரி மாவட்டம், கூடலுார் அருகே நான்கு பேரை கொன்ற டி-23புலியை சுட்டுக்கொல்ல வனத்துறை உத்தரவிட்டதாக செய்திகள் வெளிவந்தது. மேலும் இதற்காக தமிழக, கேரள வனத்துறையினர், தமிழக அதிரடிப்படை நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் இணைந்து, பல குழுக்களாக பிரிந்து புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
‘ட்ரோன்’ கேமராவும் பயன்படுத்தப்பட்டது. சிப்பிபாறை வகையை சேர்ந்த, ‘அதவை’ என்ற மோப்ப நாயும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது.புலியை சுட்டுப்பிடிப்பது அல்லது சுட்டுக்கொல்வது என முடிவு செய்யப்பட்டு களத்தில் இறங்கியுளார்கள்.
இந்த நிலையில் முதன்மை வன அதிகாரி ஜெயக்குமார் நீரஜ் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்
டி 23புலியை எக்காரணம் கொண்டும் சுட்டுக் கொல்லப்படாது என்றும் உயிருடன் பிடிக்க தீவிர முயற்சி நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் புலியினை பிடிக்க கும்கி யானைகள் மீது அமர்ந்தவாறு அடர்ந்த புதருக்குள் சென்று தேட, கும்கி யானைகளை வரவழைக்க முடிவு செய்தனர். இதற்காக முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சீனிவாசன் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.
ட்ரோன்’ கேமரா, கும்கி யானை,சிப்பி பாறை வேட்டை நாய், மோப்ப நாய்,கேரளா வனத்துறையினர், தமிழக வனத்துறையினர் என களம் இறக்கப்பட்டு புலியினை பிடிக்க முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது.