தமிழக சுகாதாரதுறை அமைச்சருக்கு கடிதம் எழுதிய வானதி சினிவாசன்.

பெறுநர்
மாண்புமிகு . மா.சுப்ரமணியம் அவர்கள்,
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்,

பொருள் : கோவிட் பெருந்தொற்றின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த சில ஆலோசனைகள்

ஐயா,
சீன கொரானாவின் இரண்டாவது பெருந்தொற்று அலையை கட்டுப்படுத்த சில ஆக்கப்பூர்வமான யோசனைகளையும், தேவையான முன்னேற்பாடுகளையும் உங்களின் பார்வைக்கு அனுப்புகிறேன். இதன் மூலம் இரண்டாம் அலையின் தாக்கத்தை தமிழகத்தில் கட்டுப்படுத்த முடியும் என நம்புகிறேன்.

  1. அரசு பொது மருத்துவமனைகள், ESI மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வசதியுடனுன் கூடிய படுக்கை வசதிகள், மற்றும் சாதாரண படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.
  2. மருத்துவ பயன்பாட்டிற்கான ஆக்ஸிஜன் உற்பத்தியை அரசு மருத்துவமனை, மற்றும் இ எஸ் ஐ மருத்துவமனை வளாகத்தில் நிறுவப்பட வேண்டும்.
  3. சில சிறிய மாற்றங்கள் மூலம் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய வாய்ப்புள்ள தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்.
  4. கொரானா சிகிச்சை தரும் தனியார் மருத்துவமனைகளின் கட்டணத்தை அரசு வரன்முறைப்படுத்த வேண்டும். அதோடு அபரிமிதமாக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதில்லை என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
  5. பிரதமர், மற்றும் முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இருப்பவர்களுக்கும், ஏழை, நடுத்தர மக்களுக்கும் அரசாங்கம் இலவச ஆம்புலன்ஸ் சேவையை வழங்க வேண்டும்.
  6. லாக்டவுன் நடைமுறைகளை மிக கவனமாகவும் தீவிரமாகவும் கடைபிடிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். நோய் பரவல் சங்கிலியை உடைக்க லாக்டவுன் மட்டுமே நல்ல தீர்வாக இப்போது இருக்கிறது.
  7. தேர்ந்த மருத்துவக்குழு மூலம் குறைவான பாதிப்புகள், நோய் தொற்றின் துவக்கத்தில் இருக்கும் நோயாளிகளையும், நோய் முற்றிய, அல்லது நோய் தொற்று அதிகம் பாதித்து இருக்கும் நோயாளிகளையும் இரு வேறு பகுதிகளில் தங்க வைத்து சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும்.
  8. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம், நோய் தொற்றின் ஆரம்பத்தில் இருப்பவர்களை தனிமைப்படுத்தி மருத்துவம் பார்க்க உதவியாக தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்க அனுமதி வழங்கலாம். இது அரசு மருத்துவமனைகள் மீதான அழுத்தத்தை குறைக்க உதவும்.
  9. பள்ளி, கல்லூரிகள், திருமண மண்டபங்கள், ஆகியவைகள் உடனடியாக கோவிட் தடுப்பு மையங்களாக மாற்றப்பட்டு அங்கு குறைவான நோய் தொற்று, ஆரம்ப நிலை நோயாளிகள், ஆகியோரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் isolation செண்டர்களாக உபயோகிக்கலாம். இதன் மூலம் நோய் தொற்று முற்றியவர்களுக்கு முதன்மையான சிகிச்சை சீக்கிரம் கிடைப்பதை உறுதிப்படுத்தலாம்.
  10. தனியார் மருத்துவமனைகள் கோவிட் சார் அனைத்து இன்ஷ்யூரன்ஸ் திட்டங்களையும் ஏற்று சிகிச்சை அளிக்க வேண்டியது கட்டாயம் என அறிவுறுத்த வேண்டும். இந்த இக்கட்டான சூழலில் வேறு காரணங்களை சொல்லி கொரானா சிகிச்சையை பாலிஸிதாரர்களுக்கு அல்லது பயனாளிகளுக்கு மறுக்க கூடாது என்று அரசு அறிவுறுத்த வேண்டும். அதே போல கேஷ்லஸ் க்ளெய்ம்க்கு ஒத்துழைக்க வேண்டும். நோயாளிகளின் குடும்பத்திடம் முழுத்தொகையும் பெற்றுக்கொண்டு பின்னர் பணம் திருப்பி அனுப்புவதை இப்போதைக்கு மருத்துவமனை நிர்வாகங்கள் கைவிட வேண்டும் என்பதையும் அரசு வலியுறுத்தி சொல்ல வேண்டும்.
  11. நோயாளிகளுக்கு உரித்த நேரத்தில் ஆரோக்கியமான உணவு வழங்கப்பட வேண்டும். இந்த ஆரோக்கிய உணவு வழங்கலில் தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும், சேவை அமைப்புகளையும் இணைத்து கொண்டு பணியாற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
  12. சித்தா, ஆயுர்வேதா மருந்துகள் வழங்கப்படுவதையும் கண்காணிக்க வேண்டும். நோய் தொற்றின் துவக்கத்தில் சித்த, ஆயுர்வேத மருந்துகள் சிறப்பாக செயல்படுவதை கேரளா, குஜராத் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பார்த்தோம். அதன் அடிப்படையில் ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதலில் இருக்கும் மருத்துவ நடைமுறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதோடு காந்திபுரத்தில் உள்ள சித்தா மையம் மக்களின் முழு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும்.
  13. சித்தா, ஆயுர்வேத மருந்துகள், கசாயங்கள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  14. பள்ளி, கல்லூரிகள், மண்டபங்களில் செயல்படும் தனிமைப்படுத்தும் மையங்களுடன் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இணைக்கப்பட்டு தனிமைப்படுத்தும் மையத்தில் இருபபவர்களுக்கு முறையான மருத்துவ வசதி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்
    16 .ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையை பெருக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  15. வெண்டிலேட்டர்கள் மற்றும் லைப் சப்போர்ட் சிஸ்டம்களின் எண்ணிக்கையை உடனடியாக உயர்த்த தேவையான நிதி உதவியை அரசு ஒதுக்கி செயல்படுத்த வேண்டும்.
  16. நோய் அச்சம், தொற்றுப்பரவல், சிகிச்சைகள் பற்றி நோய் தொற்று உள்ளவர்களுக்கும் , அவர்களின் குடும்பத்தார், சுற்றுப்புறத்தில் இருப்பவர்களுக்கும் விழிபுணர்வு பெற மனோதத்துவ ஆலோசனை மையங்கள் அமைக்கட வேண்டும்.
  17. ஆக்ஸிஜனோடு கூடிய படுக்கை வசதி, வெண்டிலேட்டரோடு கூடிய படிக்கை வசதி , தனிமைப்படுத்தும் மையங்களில் இருக்கும் படுக்கை வசதி ஆகியவை பற்றி தினமும் இருமுறை காட்சி, அச்சு ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மூலம் சொல்லப்பட வேண்டும்.
  18. ஒருங்கிணைந்த கோவிட் கட்டளை அறை மூலம் அரசு தனியார் மருத்துவமனை, தனிமைப்படுத்தும் மையங்களை அணுகுதல், பெட் இருப்பு ஆகியவை பற்றிய தகவல்கள் அளிக்கப்பட வேண்டும்.
  19. மருந்து தொகுப்புகள், பாதுகாப்பு கவசங்கள், தனிமைப்படுத்தும் மையங்கள், வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டிருப்பவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
  20. அரசு மருத்துவமனை, இ எஸ் ஐ யில் தற்காலிக கழிப்பறைகளை அமைத்து உதவ வேண்டும்.
  21. கொரானாவினால் மரணமடைந்தவர்களின் பூத உடலை காக்க வைக்காமல் உடனடியாக எரிக்க இன்னும் சில சிறப்பான ஏற்பாடுகள் தேவை. அதோடு மாநகர சுகாதார துறையோடு இணைந்து பழைய சுடுகாடுகள், மின் மயானங்களின் செயல் திறனை அதிகரிக்க தேவையான உதவிகள் செய்யப்பட வேண்டும். இறுதிக்காரியங்கள் , எரிதகனம் முறையாக நடக்க தேவைதான அனைத்து உதவிகளும் செய்யப்பட வேண்டும்.
  22. செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையிலோ, சேவையின் அடிப்படையிலோ அதிக எண்ணிக்கையில் மருந்தாளுநர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும்.
  23. நோய் தொற்றால் இறந்தவர்களின் உடமைகள், மருத்துவகழிவுகள், உடற் கூராய்விற்கு பின்பான உடல் கழிவுகள், பாதுகாப்பு கவசங்கள், உடைகள் ஆகிய குப்பைகள் முறையாக அகற்றப்பட்டு நீக்கம் செய்யப்பட வேண்டும். அதை கண்காணிக்கவும் தேவையான ஏற்பாடுகளை செய்யவும்.

நன்றி

வானதி சீனிவாசன் Bsc ., M.L ., M.L.A
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர்

Exit mobile version