கடந்த வாரம் ரஷ்யாவில் மருத்துவம் படிக்கச் சென்ற தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள், திரு.மனோஜ், திரு.விக்னேஷ், திரு.மொஹமத் ஆஷிக், திரு. ஸ்டீஃபன் ஆகியோர், வோல்கா நதியில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு மரணித்தது நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
ஆகஸ்ட் 10ந் தேதி இது குறித்து உடனடியாக தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் மாண்புமிகு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களை தொடர்பு கொண்டு,தமிழக மாணவர்களின் உடலை உடனடியாக மீட்டு, தமிழகம் கொண்டு வர கடிதம் எழுதினேன். 11 ஆகஸ்ட் அன்று, மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் திரு.முரளிதரன் அவர்களிடமிருந்து ரஷ்யாவில் நமது தூதரகம் இது குறித்து மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்திருந்தார். மேற்சொன்ன அனைத்தும் ஊடக வாயிலாக தமிழக மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நேற்று, வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் வந்துள்ள தகவலின்படி, வோல்கார்டிலிருந்து உடல்கள் மாஸ்கோவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று (18-08-2020) உடல்கள் இஸ்தான்புல் கொண்டுவரப்பட்டு, துருக்கி விமானம் மூலம் 21 அன்று இஸ்தான்புல்லிலிருந்து புறப்பட்டு, 22 ஆகஸ்ட் அன்று சென்னை வந்தடையும் என்று தகவல் வந்துள்ளது.
இதனை தொடர்ந்து பாஜக தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
ஒவ்வொரு இந்தியக் குடும்பங்களுக்கும், அதிலும் தமிழர் நலனுக்காக அயராது உழைக்கும் நமது பாரதப் பிரதமர் அவர்களுக்கும், தமிழர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து, கொரோனா காலத்திலும் அயராது நமது கோரிக்கைக்கு விரைந்து செயல்பட்ட தூதரக அதிகாரிகள், தொடர்ந்து மாணவர்களின் பெற்றோரோடு தொடர்பில் இருந்து, உடலை கொணர்ந்து சேர்க்க உறுதுணையாய் இருக்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாண்புமிகு டாக்டர்.ஜெய்சங்கர் ஜி, மாண்புமிகு முரளிதரன் ஜி அவர்களுக்கும், நமது இதய பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.என கூறியுள்ளார் பாஜக தலைவர்.எல்.முருகன்