தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை என் என் மக்கள் என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார் நேற்றைய தினம், 200 வது தொகுதியான மத்திய சென்னை பாராளுமன்றத்திற்குட்பட்ட துறைமுகம் தொகுதி துறைமுகத்தில் நடைபெற்றது இந்த யாத்திரையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா கலந்து கொண்டார்.
யாத்திரையை தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை அனைத்து மக்களையும் சந்திக்க வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் கட்டளை ஆறு மாதமாக யாத்திரை மேற்கொண்டு வருகிறேன் கொடிய மோசமான சித்தாந்தம் கொண்ட திமுகவை பல தடைகளை மீறி இந்த யாத்திரை நடைபெறுகிறது. ம் வேலை தற்போது தான் ஆரம்பித்துள்ளது பாஜக சார்பில் தமிழகத்தில் இருந்து உறுப்பினர்களை நாடாளுமன்றம் அனுப்பி வைக்க வேண்டும். அடுத்த அறுபது நாட்கள் இன்னும் வேகமாக உழைக்க வேண்டும்,
யாத்திரையில் முக்கிய பிரச்சினைகளை மக்கள் முன் வைக்கிறோம் சென்னை மக்கள் மழை வெள்ளத்தால் தங்களின் சொத்துக்களை ஏழு நாட்களில் கலந்துள்ளார்கள் 42 சதவீதம் மழை நீர் பணிகள் கூட இன்னும் மேற்கொள்ளப்படவில்லை இந்தியாவின் பெரு நகரங்கள் அனைத்தும் பாஜகவின் பக்கம் உள்ளதால் அந்த நகரங்கள் வளர்கிறது தென் சென்னை குடும்ப ஆட்சி மத்திய சென்னை கலைஞர் குடும்பம் வடசென்னை குடும்ப ஆட்சியில் உள்ளது மழை வரும் மழை வரும் போதெல்லாம் சென்னை மக்கள் பயப்படும் நிலை மாற வேண்டும்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் போது மத்தியநிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை பார்த்து உங்களின் தோப்பனார் பணமா என்று தயாநிதி மாறன் கேட்கிறார். நிர்மலா சீதாராமன் கண்ணியமான ஒரு நபர். அவர் இது குறித்தெல்லாம் பேச மாட்டார். ஆனால், நாடாளுமன்றத்தில் வைத்து தோப்பனார் பணமா என்று கேட்ட தயாநிதி மாறனுக்கு பாஜக சார்பில் நான் பதில் சொல்லவில்லை என்றால் அது பெரும் தவறாகிவிடும்.
தயாநிதி மாறனைப் பார்த்து நான் கேட்கிறேன்… முரசொலி மாறனின் மகன் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே இன்று நீங்கள் இன்னும் அரசியலில் இருக்கிறீர்கள். இதைத் தவிர உங்களுக்கு அரசியல் இலக்கணம் எதுவும் இல்லை. 2011இல் சொந்த காரணங்களுக்காக அமைச்சரவையில் இருந்து வெளியேறியதாகச் சொன்னீர்கள். ஆனால், நீங்கள் ஊழல் செய்து அமைச்சரவையில் இருந்து துரத்தப்பட்டீர்கள் என்பது அனைத்து தமிழக மக்களுக்கும் தெரியும்.
இன்று நான் கேட்கிறேன்.. அமைச்சரவையில் இருந்து விலக வேண்டும் என்று உங்கள் தோப்பனார் சொன்னாரா.. அமைச்சராக இருந்த போது பிஎஸ்என்எல் டெலிபோன் கனெக்ஷனை உங்கள் தனியார் டிவி நிறுவனத்தின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தினீர்கள். உங்கள் தோப்பனார் சொல்லியா அப்படிச் செய்தீர்கள்.. தலைமைச் செயலாளரைப் பார்த்துவிட்டு வந்து நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களா என்றீர்கள்.. உங்கள் தோப்பனார் சொன்னாரா இப்படிப் பேச வேண்டும் என்று..
நீங்கள் பேசும் அதே மொழியில் எங்களுக்கும் பதில் பேசத் தெரியும்.. ஆனால் தேவையில்லாமல் பேச வேண்டாம் என இருக்கிறோம். வரும் பாராளுமன்ற தேர்தலில் சென்னையில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் 3 எம்பிக்களும் நமது பிரதமர் மோடியின் கனவை நிறைவேற்றுபவர்களாக இருப்பார்கள். இதன் மூலம் புது சென்னையை நம்மால் கட்டமைக்க முடியும். தமிழ்நாட்டில் நாம் சரித்திரம் படைக்க போகிறேம்.. நாம் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றம் நிச்சயம் நடக்கும்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தயாநிதி மாறனை பொளந்து கட்டிவிட்டார்.