காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் வயநாடு எம்.பியுமான ராகுல் காந்தி நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுத்து கொண்டு இருக்கிறார். இதற்கு, கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் ஐனநாயக வழியில் செல்லாமல் தொடர்ந்து அராஜக வழியை பின்பற்றி வருகின்றனர். அந்தவகையில், தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் காங்கிரஸ் கட்சியினர் சில நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர்.
இதில், கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரேணுகா செளத்ரி காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவரின் ஆடையை பிடித்து இழுத்து சமீபத்தில் அவமதித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நேரில் ஆஜராகி மீண்டும் விளக்கம் கொடுத்து இருக்கிறார் ராகுல் காந்தி. இதற்கு, கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி இருக்கின்றனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை துணை ராணுவத்தினர் கைது செய்து இருக்கின்றனர். அப்பொழுது, அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவராக இருக்கும் நெட்டா டிசோசா ராணுவ படையினர் மீது எச்சில் உமிழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.