சித்திரை மாத வளர்பிறை சதுர்த்தசி திதியில் நரசிம்ம ஜெயந்தி கூடவே ஸ்வாதி நட்சத்திரமும் கலந்து….
கருணைக்கடலான நரசிம்ம மூர்த்தி பிரகலநாதனை தன் மடியில் இருத்தி, ”நீ ஏன் தூணைக் காட்டினாய், துரும்பைக் காட்டியிருக்கக் கூடாதா? என்று பிரகலநாதனிடம் கேட்க, ”ஏன் இப்படி கேட்கிறீர்கள்? என்று பிரகலாதன் கேட்க, தூண் என்பதால், இரணியன் அதை உடைக்கும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. துரும்பு என்றால் அதைக் கிள்ளியெறிந்தவுடன் பிரசன்னமாகி இருப்பேனே! இவ்வளவு நேரம் கடந்திருக்காதில்லையா?! நீயும் அவஸ்தை பட்டிருக்க மாட்டயல்லவா?! என்றாராம். ஆம்! நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை. அவரிடம் வைக்கும் கோரிக்கை உடனுக்குடன் நிறைவேறும். கேட்ட வரத்தை கேட்ட மாத்திரத்திலேயே அளிக்க வல்லவன் இந்த நரசிம்மர்.
இறைவனுக்கு உயிர்களை காக்க மட்டுமே தெரியும். அசுரக்குலத்தில் பிறந்து, பரம எதிரியின் மகனையே கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து காப்பாற்றும் கடவுள் நம்மை காப்பாற்ற மாட்டாரா?! அப்படி அவர் நம்மை காக்க என்ன செய்யனும்?! தவமிருக்கனுமா?! இல்ல விரதமிருக்கனுமா?! பூஜை?! அர்ச்சனை?!ம்ஹூம் எதுமே வேணாம். அபயம்ன்னு அவன் தாளில் முழுமையாய் சரணாகதி அடைந்தால் போதும். நம்மை காப்பான் இறைவன்.
நரசிம்ம மூல மந்திரம்..
‘ஓம் வஜ்ரநாகாய வித்மஹே
தீட்சண தன்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ நரஸிம்ஹாய ப்ரசோதயாத்’
ஸ்ரீராம் கண்ணன்