ஒரேதேசம் ரிப்போட்டர் வாசகர்களுக்கான இன்றைய ராசிபலன்களை துல்லியமாக இங்கே கணித்து தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீ .காலகணிதன் அவர்கள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான தின பலன்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
மேஷம் ராசி நேயர்களே
அன்பர்களே இன்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவல் இன்று வந்துசேரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். உங்கள் செயல்கள் லாபத்தை உண்டாக்கும். வராமல் இருந்த பணம் வந்துசேரும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
ரிஷப ராசி நேயர்களே
இன்று தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். ஆதாயம் அதிகரிக்கும். வியாபாரம் விருத்தியாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். இழுபறியாக இருந்த செயல்கள் முடிவிற்கு வரும். உங்களைவிட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் உங்களைத்தேடி வருவார்கள்.
மிதுன ராசி நேயர்களே
இன்று திட்டமிட்ட செயல்களை நிறைவேற்றி சாதிப்பீர்கள். அந்நியர்கள் உதவி உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உழைப்பு அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி ஆதாயம் தரும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.
கடக ராசி நேயர்களே
இன்று உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். நேற்றைய சங்கடங்கள் விலகும். வரவேண்டிய பணம் வந்து சேரும். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நன்மையாகும். பணிபுரியும் இடத்தில் செயல்களில் கவனம் அவசியம். மறைமுக எதிகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள் என்றாலும் அதை சமாளித்து நினைத்ததை அடைவீர்கள்.
சிம்ம ராசி அன்பர்களே
இன்று உங்கள் எண்ணங்கள் பூர்த்தியாகும். கூட்டுத் தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். நண்பர்களால் ஆதாயம் அடைவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சங்கடம் விலகும். நீண்டநாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கன்னி ராசி நேயர்களே
இன்று ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். உங்கள் முயற்சிகள் இன்று வெற்றியாகும். எதிரிகள் விலகிச்செல்வார்கள். விழிப்புடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர்கள். பணிபுரியும் இடத்தில் உண்டான சங்கடம் விலகும். உங்கள் முயற்சி ஆதாயமாகும்.
துலாம் ராசி அன்பர்களே
இன்று நீண்டநாள் முயற்சி நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்கள் பொறுப்புகள் கூடும். பூர்வீக சொத்து குறித்த பிரச்சினை முடிவிற்கு வரும்.
விருச்சிக ராசி நேயர்களே
இன்று அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் உழைப்பிற்கேற்ற ஆதாயம் காண்பீர்கள். தொழில் நிலையில் திருப்தி ஏற்படும். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த அனுகூலம் உண்டாகும். உறவினர்களுக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி ஏற்படும்.
தனுசு ராசி அன்பர்களே
இன்று குடும்பத்தில் சில பிரச்சினைகள் தோன்றி மறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தோன்றும். உங்கள் முயற்சி வெற்றியாகும். சமூக சேவையில் ஈடுபட்டுள்ளவர்களின் செல்வாக்கு உயரும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டாகும். நிதிநிலை உயரும்.
மகர ராசி அன்பர்களே
இன்று வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வந்துசேரும். பொருளாதார நெருக்கடி நீங்கும். தடைப்பட்டிருந்த வருவாய் மீண்டும் வரத்தொடங்கும். உங்கள் செயல்கள் எளிதாக நிறைவேறும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள்.
கும்ப ராசி அன்பர்களே
இன்று உங்கள் செயல்களில் குழப்பம் உண்டாகும். முயற்சிகள் இழுபறியாகும். வரவு செலவில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையாகும். வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிப்பீர்கள். அலைச்சல் அதிகரித்தாலும் உங்கள் செயல் லாபமாகும். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நன்மையாகும்.
மீன ராசி அன்பர்களே
இன்று அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். கவனமுடன் செயல்படுவதால் நன்மை உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் அவசியம். வியாபாரத்தில் நெருக்கடி அதிகரிக்கும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். உதவி புரிவதாக சொன்னவர்கள் விலகிச்செல்வார்கள்.