இன்றைய இராசி பலன் 09.02.2024 வெள்ளி கிழமை …. நல்லதே நடக்கும்..

rasipalan

rasipalan

மேஷம் அரசு வழியில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் சாதகமாகும். நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வாடிக்கையாளர்களை அதிகரிக்க புதிய முயற்சிகள் மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். முன்னோர் வழிபாடு நலம்தரும்.

ரிஷபம் நண்பர்கள் ஒத்துழைப்பால் ஒரு காரியம் நிறைவேறும். உங்கள் முயற்சி லாபமாகும். முன்னோர் வழிபாடு மனதில் அமைதியை உண்டாக்கும். தடைபட்டிருந்த செயல்களை இன்று தொடர்வீர்கள். மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தினர் தேவைகளைத் தெரிந்து பூர்த்தி செய்வீர்கள்.

மிதுனம் இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடிகள் விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். நீண்ட நாட்களாக நெருக்கடியை உண்டாக்கி வந்த ஒரு பிரச்சினை தீரும் என்றாலும் செயல்களில் விழிப்புணர்வு அவசியம்.

கடகம் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத் துணையின் வழிகாட்டுதலுடன் ஒரு செயலில் லாபம் காண்பீர்கள். வருவாய் அதிகரிக்கும். உங்கள் எண்ணம் நிறைவேறும். நண்பர்களால் ஆதாயம் காண்பீர்கள். வெளியூர் பயணம் லாபமாகும். பொருளாதார நிலை உயரும்.

சிம்மம் திட்டமிட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். முன்னோர் வழிபாட்டின் வழியாக மனதில் இருந்த சங்கடம் நீங்கும்.
உடலில் இருந்த சங்கடம் தீரும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வருமானத்திற்குரிய முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

கன்னி உயர்ந்த இடத்தில் இருப்பவர்களை சந்திப்பீர்கள். உங்கள் முயற்சி லாபமாகும். சொத்து விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். முன்னோரை வழிபட்டு புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். செயலில் இருந்த தடைகள் விலகும். உறவினர்கள் ஆதரவு நன்மையை வழங்கும்.

துலாம் நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தாய்வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

விருச்சிகம் கவனமுடன் செயல்பட்டு லாபம் அடைவீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தில் உண்டான குழப்பம் விலகும். உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். நண்பர்களால் அனுகூலம் காண்பீர்கள். வரவை வைத்து கடன்களை அடைப்பீர்கள்.

தனுசு நீங்கள் எண்ணிய செயலை துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். வரவேண்டிய பணம் வந்து சேரும். ஒரு சிலர் முன்னோர் வழிபாட்டில் ஈடுபடுர்கள். வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். பண வரவில் இருந்த தடைகள் விலகும். நிதிநிலை உயரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை ஏற்படும்.

மகரம்
உறவினர் ஆதரவுடன் நீண்டநாள் பிரச்சினை ஒன்றில் முடிவு காண்பீர்கள். முன்னோரை வழிபடுவீர்கள். மனக்குழப்பம் நீங்கும். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
கேட்ட இடத்தில் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்தில் உண்டான சங்கடம் விலகும். உங்கள் செல்வாக்கு உயரும்.

கும்பம் அலைச்சல் அதிகரிக்கும். தொலைந்து போன பொருள் கிடைக்கும். வேலை பளுவின் காரணமாக மனதில் சலிப்பு உண்டாகும். மற்றவர்கள் உங்களை அலட்சியம் செய்வதாக நினைத்து வருந்துவீர்கள். அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்படும்.

மீனம்
உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். செயலில் லாபம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வந்துசேரும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும்.

Exit mobile version