சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் ரவுடித்தனம் செய்த கம்யூனிஸ்ட் பாலபாரதி! பல ஆண்டுகளாக கட்டணம் செலுத்தாதது அம்பலம்!

சீமான், வேல்முருகன் போன்றவர்கள் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் அடிக்கடி ரவுடித்தனம் செய்தது பழைய கதை.  கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி, சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்தாமல் பித்தலாட்டம் செய்ததுள்ளதான் தற்போது செய்தி.

இவர் கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை மணவாசி சுங்கச்சாவடியில் தனது காருக்கு கட்டணம் செலுத்தாமல் ரவுடித்தனம் செய்தார். அங்கிருந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் பாலபாரதியின் காருக்கு 70 ரூபாய் கட்டணம் செலுத்தும் படி கூறி உள்ளனர். ஆனால் முன்னாள் எம்எல்ஏவான பாலபாரதி, 70 ரூபாய் கட்டணம் கட்ட முடியாது என்று கூறி ரவுடித்தனத்தில் ஈடுபட்டுள்ளார். “நான் ஒரு முன்னாள் எம்எல்ஏ. ஆகவே சுங்கச்சாவடியில் எனது காருக்குப் கட்டணம் கட்ட மாட்டேன்” என்று கூறி சண்டித்தனம் செய்துள்ளார்.

அதற்கு அங்கிருந்த பணியாளர்கள், “எம்எல்ஏவாக இருப்பவர்களுக்கு மட்டும்தான் அதற்கு உரிய அடையாள அட்டையை காண்பித்தால் சுங்கச்சாவடியில் பணம் கட்ட தேவையில்லை. முன்னால் எம்எல்ஏக்களுக்கு பணம் கட்ட வேண்டும் என்பது விதிமுறை” என்று எடுத்துச் சொல்லியுள்ளனர். இதனை பாலபாரதி காதில் வாங்காமல் தொடர்ந்து ரகளை செய்து வந்தார்.

தற்போது டோல்கேட்களில் பாஸ்ட்டேக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஒரே ஒரு வழி மட்டுமே கட்டணம் செலுத்தும் வழியாக உள்ளது. ஆகவே பாலபாரதியின் ரகளையால், அவருக்குப் பின்னால் வந்த அனைத்து வாகனங்களும் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டன. இதனால் ஒரு மணி நேரம் மணவாசி சுங்கச்சாவடி அல்லோகலப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாயனூர் போலீஸார் விரைந்து வந்து பாலபாரதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அவருக்கு சட்ட விதிமுறைகளை எடுத்து கூறினர். அப்படி இருந்தும் பாலபாரதி 70 ரூபாய் கட்டணம் கட்ட மறுத்து விட்டார்.

அதன் பிறகு வேறு வழியில்லாமல் சுங்கச்சாவடி ஊழியர்கள், பாலபாரதி தற்போதைய எம்எல்ஏ என்பது போன்று மோசடியாக கம்ப்யூட்டரில் பதிவு செய்து, அதன் மூலம் பாலபாரதி கட்டண இலவசம் பெற்று அங்கிருந்து சென்றார்.

பின்னர் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பாலபாரதி, “கரூர் அருகே மணவாசி சுங்கச்சாவடியில் எனது முன்னாள் எம்எல்ஏ அடையாள அட்டையை காண்பித்து இலவச அனுமதி கேட்டேன். அவர்கள் இலவச அனுமதி வழங்க மறுத்து விட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பாலபாரதி தனது எம்எல்ஏ பதவி முடிந்த பிறகும், பல ஆண்டுகளாக எந்த சுங்க சாவடிகளில் கட்டணம் செலுத்தாமல் பித்தலாட்டம் செய்து வந்துள்ளது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

“ஏழைகளின் தோழன் என்றும், நேர்மையின் சிகரம் என்றும்” ஊரை ஏமாற்றி வரும் கம்யூனிஸ்ட் கட்சிகள், கடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைப்பதற்காக 25 கோடி ரூபாய் சட்டபூர்வமாக திமுகவிடம் இருந்து லஞ்சமாக வாங்கியது வெளிச்சத்திற்கு வந்தது. அதன் மூலம், முதல் முறையாக அவர்களின் முகமூடி கிழிந்தது. 

இப்போது முன்னாள் எம்எல்ஏ என்ற போர்வையில் பாலபாரதி பல ஆண்டுகளாகவே சுங்கச்சாவடிகளில் கட்டணம் கட்டாமல் ஏமாற்றி வந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

கம்யூனிஸ்ட் யோக்கிய சிகாமணிகள் முகத்திரை தொடர்ந்து கிழிந்து தொங்குகிறது.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version