அசாம் மாநிலம் திப்ருகரில் நடைபெற்ற அசாம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 78-வது நிறுவன தினம், திப்ரு கல்லூரியின் 62-வது நிறுவன தினம் ஆகிய விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் மாணவர் சமூகத்துடன் பரவலாக கலந்துரையாடினார்.
நாட்டின் கல்வித் துறையை சீரமைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் பங்களிப்பை சோனாவால் எடுத்துரைத்தார். இது இந்தியாவை ‘விஸ்வ குரு’வாக மாற்றியுள்ளது என்று அவர் கூறினார்.
அசாம் மருத்துவக் கல்லூரியின் இளம் மனங்களுடன் பேசிய மத்திய அமைச்சர், “சமூகத்தில் அறிவியல் மனப்பான்மையை உருவாக்க எந்தவொரு மருத்துவரும் வகிக்கும் பங்கு முக்கியமானது. மக்களின் வாழ்க்கையை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வளப்படுத்தும் அதே வேளையில், இந்த மனோபாவத்தை மேம்படுத்துவதற்கு அசாம் மருத்துவக் கல்லூரியின் வளமான பாரம்பரியம் உங்கள் அனைவரின் பாதுகாப்பான கைகளில் உள்ளது என்பது மிகவும் பெருமைக்குரியது.
இன்று,பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், முழுமையான சிகிச்சை அளிக்கவும்,முழுமையான நல்வாழ்வை வழங்கவும் சிறந்த பாரம்பரிய மருத்துவத்தை நவீன மருத்துவத்துடன் ஒருங்கிணைத்து வருகிறோம் என்றார்.
அசாம் மாநிலம் திப்ருகரில் உள்ள திப்ரு கல்லூரியின் 62-வது நிறுவன நாள் கொண்டாட்டத்திலும் சோனாவால் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “21 ஆம் நூற்றாண்டு போட்டி நிறைந்ததாகும். அதில் கண்ணியத்துடன் வெற்றியை அடைய நாம் பங்கேற்க வேண்டும்.
அந்த சவாலுக்கு உங்களை தயார்படுத்த திப்ரு கல்லூரி இங்கே உள்ளது.வடகிழக்கு மாநிலங்கள் முழுவதிலுமிருந்து மாணவர்கள் இங்கு பயின்று வருகின்றனர், தேச நிர்மாணத்திற்கு சிறந்த பங்களிப்பை வழங்கும் மனித வளங்களை இதுபயிற்றுவித்து வருகிறது. அதற்காக நீங்கள் அனைவரும் நன்றி சொல்ல வேண்டும் என்றார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















