கள்ளக்குறிச்சி மாவட்டம்,உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் பகுதியில் திருநங்கைகள் குலதெய்வமாக வழிபடும் கூத்தாண்டவர் கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் சித்திரை மாதம் சித்திரத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில்,இன்று நடைபெறும் திருவிழாவில் தற்பொழுது திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்வு நடைபெற்று வருகிறது .இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து திருநங்கைகள் கோவிலுக்கு வந்து பூ, புது உடை அணிந்து மணப்பெண் கோலத்தில் தங்களை அலங்கரித்து அரவணை கணவனாக ஏற்றுக் கொண்டு பூசாரி கையால் தாலி கட்டிக் கொள்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து இன்று இரவு முழுவதும் அவர்கள் கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் கும்மியடித்து ஆட்டம் ஆடி மகிழ்வாள் இதனை தொடர்ந்து நாளை காலை சித்திரை தேரோட்டம் அதன் பிறகு அரவான் களவலி அளிக்கும் நிகழ்வானது நடைபெற உள்ளது.