உலகத்தையும் இந்தியவையும் அச்சுறுத்தி வரும் கொரோன தொற்று உலக அளவில் மிகபெரும் சேதத்தை விளைவித்துள்ளது. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் தொற்று உலகத்தை பதம் பார்த்து வருகிறது. 27 லட்சம் மக்களிடம் பரவியுள்ளது இந்த கொரோனா தொற்று . 2 லட்சத்தை நெருங்குகிறது உயிரிழப்பு. இந்தியாவில் இதுவரை 22 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சுமார் 700க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகி உள்ளது.
இந்த நிலையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடித்து வருகின்றார்கள். கொரோனா சமூக தொற்றாக பரவாமல் இருப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவை பொறுத்தவரை மஹாராஷ்டிராவில் தான் பாதிப்பு அதிகம். கொரோனா இல்லாதா மாநிலமாக கோவா மரியாதை தொடர்ந்தது தற்போது திரிபுரா மாநிலமும் கொரோனா இல்லாதா மாநிலமாக மாறியுள்ளது.
திரிபுரா மாநிலத்தில் கொரோனா உள்ளதாக 2வது நபராக அடையாளம் காணப்பட்டவருக்கு நடந்த தொடர்ச்சியான சோதனைகளுக்கு பிறகு நெகட்டிவ் ஆனதால் அவருக்கு நோய் தொற்று உறுதிபடுத்தப்படவில்லை இதனால் எங்களுடைய மாநிலம் கொரோனா தொற்று இல்லாததாகிவிட்டது என முதல்வர் பிப்லப் குமார் தேப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பிப்லப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: சமூக விலகலை பராமரிக்கவும் அரசு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். வீட்டில் பாதுகாப்பாக இருங்கள். “திரிபுராவை கொரோனா இல்லாத மாநிலமாக மாற்றியமைத்த அனைத்து மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், அனைத்து முன்னணி வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன். சமூக விலகல் மற்றும் சரியான வழிகாட்டுதல்களைப் பேணுவதன் மூலம் இதைத் தக்க வைத்துக் கொள்ள எங்களால் முடிந்தவரை முயற்சி செய்வோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்
நமக்கும் சமூக விலகலை கடைபிடிப்போம் கொரோனா இல்லாத மாநிலமாக உருவெடுப்போம்