ஆப்கனில் அமெரிக்காவும் தாலிபன்களும் செய்து கொள்ளும் அமைதி ஒப்பந்தம் அமல்படுத்தபடும் விழாவில் இந்தியாவும் கலந்து கொள்கின்றது
ஒரு காலத்தில் தாலிபன்களே இந்தியாவின் பெரும் தலைவலி, காஷ்மீர் கலவரங்கள், கார்கில் போர், காந்தகார் விமான கடத்தல் என சகலமும் அவர்களால் வந்ததே. காரணம் பாகிஸ்தானின் கட்டுபாட்டில் அவர்கள் இருந்தனர், பாகிஸ்தான் அவர்களை இயக்கியது
டிரம்பின் அமெரிக்கா தாலிபன்கள் இருக்கட்டும் ஆனால் நம் கட்டுபாட்டில் இருக்கட்டும் என அரசியல் செய்து அவர்களை தன் வழிக்கு கொண்டு வந்து, “டேய் தாலிபன்ஸ், இந்த மோடி இந்தியா நம்ப தோஸ்து, நம்பகமான கூட்டாளி. அவர் கூட ஒழுங்கா இருக்கணும், இனி எல்லாம் அமைதியா நடக்கணும் ம்ம் இந்தியாவோட கை குலுக்கு” என மிரட்ட தாலிபனும் அடங்கிவிட்டது
இனி இந்தியாவும் தாலிபானும் எதிரிகள் அல்ல
எவ்வளவு பெரும் நகர்வு இது, பாஜக இந்துவெறி கட்சி அது ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமிய நாடுகள் எல்லாம் சேர்ந்து பொங்கி வழிந்து .. என்றெல்லாம் மிரட்டினார்கள்
ஆனால் கடும்போக்கு தாலிபன்களுடனே கைகுலுக்குகின்றது இந்தியா, ஆம் “இந்து இந்தியா யாருக்கும் எதிரானது அல்ல, உங்கள் நாட்டை கலாச்சாரத்தை நீங்கள் காப்பது போல் எம்மதமும் கலாச்சாரமும் எமக்கு” இந்தியாவின் நிலைபாட்டை உலகம் சரியாக புரிந்து கொண்டது
இந்தியாவால் நமக்கு என்ன நஷ்டம்?, நம் நாட்டில் புகுந்து இம்சை செய்கின்றார்களா? இல்லை நமக்கு இடைஞ்சலா? இல்லவே இல்லை. அவர்கள் போக்கில் அமைதியாக அவர்கள் கலாச்சாரத்தில் வாழ நினைக்கின்றார்கள் நல்லது என உலகம் புரிந்து கொண்டது
இனி ஆப்கனில் இந்திய கரம் வலுவாகும் பட்சத்தில் பாகிஸ்தானுக்கு இருமுனை நெருக்குதல் கொடுக்க முடியும், பலுசிஸ்தான் பக்கம் இந்தியா ஆதிக்கம் செலுத்தினால் பாகிஸ்தான் காஷ்மீர் பக்கமே வராது
பாகிஸ்தான் இதற்கே தலையில் துண்டுபோட்டு அலறும் பொழுது அந்த துண்டை எடுத்து தலையில் உலக்கையால் அடிக்கின்றது அமெரிக்கா
ஆம், அந்த செய்தி பாகிஸ்தானின் உறக்கத்தை ஒழித்துவிட்டது, சீனாவுக்கு கெரோனாவினை விட பெரும் பயம் வந்துவிட்டது
விஷயம் என்னவென்றால் அமெரிக்காவின் அதிநவீன MQ 9 -ரீப்பர் விமானங்கள் 30 இந்தியாவுக்கு வர இருக்கின்றன, இவை உளவு மட்டுமல்ல ஏவுகனை வீசும் வசதி கொண்டது, சுலைமானி போட்டு தள்ளபட்டதெல்லாம் இப்படிதான்
இன்று அரேபியாவில் கலக்கி அடிக்கும் விமானம் இது
இது வரும் பட்சத்தில் இந்தியாவின் ஏன் இந்தியாவுக்கு வெளியே உலகின் எந்த மூலையில் இருந்தும் எல்லையினை கண்காணிக்கலாம், தீவிரவாத முகாம் தரையடி பங்கர் நீர்மூழ்கி கப்பல் வரை காட்டிகொடுக்கும் விமானம் இது
மிகபெரும் பலம் அது, அலாவுதீன் பூதம் போல எதிரியின் பலம் எல்லாவற்றையும் கண்முன் காட்டிகொடுக்கும், தேவைபட்டால் அடித்து நொறுக்கும் விஞ்ஞான பூதம் அது
ஆள் செலுத்தும் விமானங்களை கொண்டே பால்கோட்டை துளைத்த இந்தியா, ஆளில்லா விமானம் கிடைத்தால் என்னவெல்லாம் செய்யும்?
முப்படைகளுக்கும் MQ 9 தலா 10 விமானம், ஆக 30 விமானம் வாங்க இந்தியா கோரியதற்கு அமெரிக்கா அனுமதி கொடுத்தாயிற்று
அமெரிக்க சட்டபடி ஆயுதம் விற்க அமெரிக்க ஜனாதிபதி மட்டும் ஒப்புதல் அளிக்கமுடியாது அமெரிக்க செனட்டும் ஒப்புதல் கொடுக்க வேண்டும் , அதுவும் இந்தியா நல்ல நாடு என ஒப்புகொண்டாயிற்று
இனி விரைவில் அதிநவீன ட்ரோன் ரீப்பர்கள் இந்தியா வரும்
முன்பெல்லாம் இந்தியா உலக அரங்கில் பாதுகாப்பில் 50 வருடம் பின்னோக்கி இருந்தது, உலகின் முன்னணி ஆயுதங்கள் இந்தியா வர பல்லாண்டு ஆகும், அல்லது வராது.
இப்பொழுது மோடி அரசு உலகின் அனைத்து உச்ச நுட்பங்களையும் நொடியில் இந்தியாவுக்கு கொண்டுவந்துவிடுகின்றது.
உறுதியாக சொல்லலாம் இரண்டாம் முறை மோடி வந்ததும் இந்தியாவுக்கு நல்ல நேரமே, ஏகபட்ட விஷயங்கள் நல்லமுறையில் நடக்கின்றன
ஒரு காலத்தில் பீரங்கி முதல் கிரையோஜெனிக் வரை இந்தியா பெறகூடாது என தடைவிதித்த நாடு அமெரிக்கா, எவ்வளவோ சிக்கல்களை கொடுத்தது
இப்பொழுது மோடியின் அரசு அவர்களின் மனநிலையினை மாற்றி இந்தியாவினைபற்றி அவர்கள் நன்கு புரிந்துகொள்ளும்படி தன் நிலைபாட்டை வெளிபடுத்தி தனியிடம் பெற்றுவிட்டது
இனி அமெரிக்க MQ 9 ட்ரோன் வைத்துள்ள ஒரே ஆசிய நாடு இந்தியா ஒன்று என்பதுதான் இந்திய ராணுவத்தின் மகா பலம் பொருந்திய நிலை, நிச்சயம் இந்திய ராஜ தந்திரத்தின் வெற்றி
கட்டுரை வலதுசாரி எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன்.