நேற்றைய தினம் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழக நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டார். இதில் ஹை லைட் தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் தலையில் 2.63 லட்சம் கடன் இருக்கிறது என்று சொன்னது தான் வெள்ளை அறிக்கையின் ஹை லைட்.
தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாததற்கான காரணம் தேடும் வெற்று அறிக்கையாகவே இன்றைய வெள்ளை அறிக்கை உள்ளது.திமுகவின் பட்ஜெட்டுக்கு முன்பான வெள்ளை அறிக்கை வாண வேடிக்கையாக இருக்கும் என பெரிது எதிர்பார்க்கப்பட்டது; ஆனால் அது புஷ்வாணமாகவே முடிந்து போய்விட்டது.
வரி விதிப்பு இல்லாத ஜீரோ பட்ஜெட் இருக்க முடியாது என்று சொல்வதன் மூலம், 13-ஆம் தேதி பட்ஜெட்டில் பெரிய அளவிற்கு வரி விதிப்புக்கள் உண்டு என்பதை சொல்லாமல் சொல்வதாகவே உள்ளது. திமுக, தங்களின் கையாலாகாத தனத்திற்கு அதிமுக-பாஜக அரசுகளை குறைசொல்லி தப்பிக்கும் முயற்சியாகவே இந்த வெள்ளை அறிக்கை உள்ளது.
போக்குவரத்து மற்றும் மின்துறை கடன் வாங்கும் சூழ்நிலை எச்சரிக்கை நிலையில் உள்ளது. வெள்ளை அறிக்கை தாக்கல் செய்த தமிழக நிதியமைச்சர். மின்துறையில் மின்சார இழப்பு குறைத்தால் மட்டுமே மின்துறை இழப்பில் இருந்து மீள முடியும். பழங்கால மின் ஒயர்கள்களால் சேதாரம் அதிகமாகிறது அதனால் மின்துறை நவீன மயமாக்கப்பட வேண்டும்.
மின்சாரக் கொள்ளை அதிகமாக நடைபெறுகிறது உடனே சிலர் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று குரல் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.நுகர்வோருக்கு மின் விநியோகம் செய்வதில் தனியார் பங்களிப்பு இருக்க வேண்டும்.
போக்குவரத்துறை ஏராளமான கடனில் சிக்கித் தவிக்கிறது. தனியாருக்கு சொந்தமான பேருந்து பத்து வருடங்களுக்கு பராமரிக்கப்படுகிறது. அரசாங்க பேருந்துகள் சரியாக பாராமராமரிக்கப்படுவதில்லை இதனால் அரசாங்க பேருந்துகள் சில வருடங்களிலேயே மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறது.
இவ்வளவு கடனில் சிக்கி தவிக்கும் அரசாங்க பேருந்துகளில் மகளீருக்கு இலவசமாக பயணம் என்பது தேவையற்றது. விரைவில் அரசாங்க போக்குவரத்து கழகங்கள் மூடு விழா நடத்தப்படலாம். இன்றைய அரசு எந்த மாயாஜாலம் செய்தாலும் மின்வாரியம் மற்றும் போக்குவரத்து கழகங்களை லாபத்தில் கொண்டு வரமுடியாது.
தேர்தல் நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசினார் ஆனால் இப்பொழது வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறார்கள் அதனை வெள்ளை அறிக்கை மூலம் வெளியிட்டு வேடிக்கை காட்டுகிறார்கள்.
பெரிதும் எதிர்பார்ப்புக்கு உள்ளான நிதியமைச்சர் பழனிவேல் ராஜன் அவர்களின் பட்ஜெட்டுக்கு முன்பான வெள்ளை அறிக்கை வாண வேடிக்கையாக இருக்கும் என பெரிது எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது புஷ்வாணமாகவே முடிந்து போய்விட்டது.
வரி விதிப்பு இல்லாத ஜீரோ பட்ஜெட் இருக்க முடியாது என்று சொல்வதன் மூலம், 13-ஆம் தேதி பட்ஜெட்டில் பெரிய அளவிற்கு வரி விதிப்புக்கள் உண்டு என்பதை சொல்லாமல் சொல்வதாகவே உள்ளது.திமுக தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்பதை தெரிந்து கொண்டு அதிமுக மற்றும் பாஜக அரசுகளை குறைசொல்லி தப்பிக்கும் முயற்சியாகவே இந்த வெள்ளை அறிக்கை உள்ளது.