பியூட்டி பார்லரில் பெண்களைத் தாக்குவது, நில அபகரிப்பு, கள்ளத் துப்பாக்கி, தோட்டாக்கள் தயாரிப்பது மணல் கடத்துதல் என பல்வேறு சமூக விரோத குற்ற செயல்களில் ஈடுபட் வரும் திமுகவின் திமுகவின் அராஜகம் நாளொரு நாளொரு மேனியும் மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்து வருகிறது;
இந்த நிலையில் தஎடப்பாடி அருகே மாற்றுத்திறனாளியின் வீட்டை அபகரிக்க முயற்சி செய்துளார்கள் திமுக பிரமுகர்கள். மாற்று திறனாளி வீட்டிற்கு அடியாட்களுடன் வீடு புகுந்து அடாவடி செய்வதால் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் பக்கநாடு ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே பார்வையிழந்த மாற்றுத்திறனாளியான ராஜேந்திரன், கடந்த 25 ஆண்டுகளாக தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்த ஒருவரின் நிலத்திற்கு செல்ல வழி அமைப்பதற்காக, ராஜேந்திரனுக்கு சொந்தமான பட்டா இடத்தை, திமுக பிரமுகர்கள் குப்புசாமி, கணேசன், பேச்சியப்பன், சீனி ஆகியோர் அபகரித்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக பிரமுகர்கள் குண்டர்களுடன் வீட்டுக்குள் நுழைந்த அவர்கள், திண்னையையும் பொருட்களை தூக்கி வீசி, குளியல் அறையையும் சேதப்படுத்தினர். இதனை தட்டிக்கேட்ட ராஜேந்திரனின் குடும்பத்தினரை அடியாட்களை வைத்து மிரட்டி தாக்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டினர்.
வீட்டை அபகரிக்க முயற்சிக்கும் திமுகபிரமுகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தி.மு.கவினரின் அராஜக செயல்களால் கதிகலங்கி நிற்பதாக ராஜேந்திரனின் மனைவி மனக் குமுறலோடு கவலை தெரிவித்துள்ளார்.
நிலம் அபகரிக்கப்படுவதை தட்டிக்கேட்டதால், பெண் என்றும் பாராமல், தி.மு.க. பிரமுகர்கள் ஆபாச வார்த்தைகளால் வசைபாடியுள்ளார்கள் , மேலும் குடும்பத்திற்கே கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள்
நில அபகரிப்பு தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என கண்ணீருடன் கூறுகிறார் மாற்றுத்திறனாளி மனைவி கூறியுள்ளார்.
.திமுக ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்புகள், கட்டப்பஞ்சாயத்துகள், அராஜகங்கள் அதிகரிக்கும் என்ற பொதுமக்களின் குற்றச்சாட்டு, இந்த சம்பவத்திலும் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.