பிரபல யூடியூபர் விஜே சித்து மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சட்டவிதிகளை மதிக்காமல் செயல்பட்ட விஜே சித்து மீது எப்போது நடவடிக்கை எடுக்க போகிறீர்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.டிடிஎஃப் வாசன் செய்த அதே தவறை தான் விஜே சித்து செய்துள்ளார் ஆனால் டிடிஎஃப் வாசனை கைது செய்த காவல்துறை எப்போது விஜே சித்து மீது நடவடிக்கை எடுக்கும்?
யூடியூப்பில் ‘ஃபன் பன்றோம்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் விஜே சித்து. தற்போது தன்னுடைய பெயரிலேயே (விஜே சித்து விலாக்ஸ்) யூடியூப் சேனலைத் தொடங்கி நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் யூடியூபர் விஜே சித்து மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் ஒருவர் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வி.ஜே சித்து குறுகிய காலத்திலேயே 2.58 மில்லியன் (25.8லட்சம்) ஃபாலோயர்களைப் பெற்றுள்ளார். இரட்டை அர்த்தங்கள் வசனங்கள் ஆபாச பேச்சு என பேசி பிரபலமானார். அதேபோல் மொட்டை பாடி பார்ட்டி என்ற ஒரு நிகச்சியையும் தன்னுடைய யூடியூப் சேனலில் நடத்தி வருகிறார். இதன்படி ஆர்ஜே பாலாஜி, நடிகர் கவின், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகைன் ஸ்ருதிஹாசன், இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி என பலரும் கலந்துகொண்டுள்ளார்கள்.
செல்போனில் பேசியபடி காரை இயக்கியதாக புகார் எழுந்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறியதற்காக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பிரபல யூடியூபரும் பைக் ஓட்டுநருமான டிடிஎஃப் வாசன் மீது இப்படியான புகார் எழுந்தது.
சமூக வலைதளங்களில் வாசன் கைதைத் தொடர்ந்து, முடிந்தால் இவர் (விஜே சித்து) மீது நடவடிக்கை எடுங்கள் என மீம்ஸ்கள் பறந்தன. டிடிஎஃப் வாசன் மீது ஏற்கனவே ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட நிலையில் வாசன் விதிகளை மீறியதால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் வாசனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இச்சூழலில் தான் விஜே சித்து மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் பிரபலமானவர்கள் பலர் போன் பேசிய படி வண்டியை ஓட்டியே வீடியோக்களும் வெளியாகியது. அவர்கள் மீதும் நடிவடிக்கை பாயும் என்ற கேள்வி எழுந்துள்ளது
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















