திருவண்ணாமலை நகரில் உள்ள அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் தீப திருவிழாவில் நான்காம் நாள் இரவு உற்சவத்தில் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலையம்மன் கற்பக விருட்சம் வாகனத்திலும், பராசக்தி அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்திலும் எழுந்தருளி திருக்கோவிலின் நான்கு மாட விதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
நினைத்தாலே முக்தி தரும் அண்ணா திருக்கோயிலில் கார்த்திகை தீப திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பத்து நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த
ஆண்டுக்கான கார்த்திகை தீப திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து நான்காம் நாள் இரவு உற்சவத்தில் கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா தீபாராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பஞ்ச மூர்த்திகளும் திருக்கோயிலின் நான்கு மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
நான்காம் நாள் இரவு உற்சவத்தில் முதலில் விநாயகர், இரண்டாவதாக முருகர், மூன்றாவதாக அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலையம்மன், நான்காவதாக பராசக்தி அம்மன், ஐந்தாவதாக சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாக சென்று திருக்கோயிலின் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.