திருவண்ணாமலை பிரசித்திபெற்ற அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் ஒவ்வொரு மாத பெளர்ணமி அன்று லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலையில் அண்ணாமலையை சுற்றி கிரிவலம் செல்வது வழக்கம்,
அதன்படி ஐப்பசி மாத பெளர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் 28-10-2023 சனிக்கிழமை அதிகாலை 4.01 மணிக்கு தொடங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.27 மணிக்கு நிறைவடைகிறது.
மேலும் சனிக்கிழமை அன்னாபிஷேகம் நடைபெறுவதையொட்டி அன்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது,
மாலை 6 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
பெளர்ணமியையொட்டி அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் பொருட்டும், விரைந்து தரிசனம் செய்வதற்கும் ஏதுவாக 2 நாட்கள் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது,
மேலும் பெளர்ணமி தினத்தன்று எந்தவித தரிசனத்திற்கும் முன்னுரிமை வழங்கப்படாது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.