சமூக வலைத்தளங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிகளை மத்திய அரசு செயல்படுத்தியது .இந்த விதிகளுக்கு ட்விட்டர் மட்டும் பிடிவாதமாக ஒப்புக்கொள்ள மாட்டோம் என அடம் பிடித்து வந்தது. இந்த நிலையில் சமூகவலைதளங்களுக்கான புதிய விதிமுறைகளின் படி – குறை தீர்க்கும் அதிகாரி, நிர்வாகத்தின் தொடர்பு நபர், இணக்க அதிகாரி – ஆகியோரை நியமிக்க தவறியதால், ட்விட்டர் தன் இடைநிலை” (intermediary) அந்தஸ்தை இழந்தது!
மத்திய அரசின் புதிய விதிமுறையின்படி, பயனாளர்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க, நம் நாட்டிலேயே குறை தீர்ப்பு அதிகாரியை நியமிக்காமல், ‘டுவிட்டர்’ காலம் தாழ்த்தி வந்தது.டுவிட்டர் நிறுவனத்தின் அமெரிக்க பிரிவின் சட்ட கொள்கை இயக்குனர் ஜெரமி கெசல் என்பவரை, நம் நாட்டுக்கான குறை தீர்ப்பு அதிகாரியாக அந்நிறுவனம் நியமித்தது. ‘இந்தியாவில் வசிப்பவரையே, குறை தீர்ப்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும்’ என, புதிய விதிமுறை தெரிவிக்கிறது.மத்திய அரசின் விதிமுறைகளை டுவிட்டர் நிறுவனம் மீறியுள்ளதாக, அமித் ஆச்சார்யா என்ற வழக்கறிஞர், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதனை தொடர்ந்து இந்தியாவுக்கான பொதுமக்கள் குறைதீர்ப்பு அதிகாரியாக, வினய் பிரகாஷ் என்பவரை நியமித்து, டுவிட்டர் நிர்வாகம் நேற்று அறிவித்தது.மேலும், அவரது மின்னஞ்சல் முகவரியும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அதிகாரி புகாரை 24 மணி நேரத்துக்குள் ஏற்றுக்கொண்டு, அந்த புகார் மீது அடுத்த 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புகாரைப் பெற்றுக்கொண்டது தொடர்பாக புகார்தாரருக்கு ஒப்புகையும் வழங்கிட வேண்டும்.மேலும் இந்திய அரசின் சட்டதிட்டங்களை பின்பற்ற இரண்டு வார கால அவகாசம் அளிக்க வேண்டும் என ட்விட்டர் கூறியுள்ளது.