தெலுங்கிலிருந்து அதிகமாக நடிகைகள் தமிழ் சினிமாவில் காலூன்றி வருகிறார்கள். அவர்கள் தான் தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோயின்கள். தெலுங்கு சினிமாவில் சென்சேஷனல் ஹீரோயினாக அதீத கவர்ச்சியில் நடித்து வருபவர் நிதி அகர்வால்.
இவர் தற்போது தமிழில் முதல் படமே ஜெயம் ரவியுடன் பூமி என்ற படம். இந்த படம் முடிவடைந்துள்ள நிலையில் . இந்த படத்தின் முதல் போஸ்டர்கள் மற்றும் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டது கொஞ்சம் கவர்ச்சி அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்க வேண்டும் ஒரு முடிவோடு களமிறங்கியிருக்கும் நிதி அகர்வால் அடுத்ததாக சிம்பு சுசீந்திரன் படத்தில் இணைந்துள்ளார்.
சிம்புவுக்கு மட்டும் எப்படி இப்படி அமையுது என திரையுலகம் யோசித்த கொண்டிருந்த வேளையில் உதயநிதி ஸ்டாலின் ரேஸில் முந்தியுள்ளார். தன்னுடைய படத்திலும் தெலுங்கு நடிகை கவர்ச்சி நடிகை நிதி அகர்வாலை இணைத்துக் கொண்டாராம். உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்தில் முதலில் அனு இமானுவேல் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ஆனால் தற்போது கொரானா காலத்தில் ஏற்பட்ட கால்ஷீட் குளறுபடியால் அனு இமானுவேல் விலக உடனடியாக சிம்பு பட நடிகையை ஒப்பந்தம் செய்துவிட்டாராம் உதயநிதி. சிம்புவின் முன்னாள் காதலியான நயன்தாராவுடன் தொடர்ந்து பல படங்களில் உதயநிதி ஜோடி போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















