தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது ஒரு செய்தி உலா வருகின்றது.
தமிழக கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியில் முத் தமிழக முதல்வர் ஸ்டாலின் மகனும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக டில்லியில் பேசப்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா, தற்போது அகில இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலராக உள்ளார். சென்னையில் முதல்வர் தலைமையில் சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழா நடந்தது.
இதில் ஜெய்ஷா பங்கேற்றார். அப்போது தி.மு.க., குடும்பத்தின் ஒரு முக்கிய நபரை ஜெய் ஷா சந்தித்துள்ளார். இந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தவர்,
ஒரு பிரபல தொழிலதிபர். தி.மு.க.,வுக்கும், பா.ஜ.,வுக்கும் இந்த தொழிலதிபர் ஒரு பாலமாக திகழ்கிறார். ஆனால், ஒரு அரசியல்வாதி கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக முடியுமா என்ற விவாதமும் எழுந்துள்ளது.
தற்பொழுது திராவிட முன்னேற்றக் கழகம் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளதாக பல்வேறு அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்:-நன்றி தினமலர்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















