திமுக இளைஞர் அணித் தலைவர் உதயநிதி தேர்தல் பிரச்சாரத்தின் பொழது ஏதோ மூப்பனார் பதாகையை மறைத்து விட்டு பிரச்சாரம் செய்துள்ளாராம் இதற்கு கோபமுற்ற தாமாகவினர் சில பேர் உதயநிதி பிரச்சார வண்டியை மடக்கி வாக்குவாதம் செய்கிறார்கள் இந்த வீடியோ ஒரு நிமிடம் ஓடுகிறது.
இப்ப அதுவல்ல பிரச்சனை அதாவது ஒரு நிமிஷத்துக்கு அந்த தமாகா ஆளை வண்டில இருந்து புடிச்சுத் தள்ள எந்த திமுகவினரும் ஏன் வரவில்லை அதாவது வண்டிக்குள்ள இருந்த திமுககாரர்களும் வரவில்லை முன்னாடி பின்னாடி போன வண்டில இருந்தும் யாரும் ஏன் இறங்கி வரவில்லை வண்டில தொங்கிட்டு இருந்தவர்களும் ஏன் தாமகவினருடன் வாக்குவாதம் செய்யவில்லை. இவ்ளோ ஏன் அந்த வண்டியோட டிரைவர் கூட இந்த சீன் முடியற வரைக்கும் வண்டிய நிறுத்தி மெதுவாத்தான் உருட்டிட்டு இருந்தார். உதயநிதி மீது திமுக தொண்டர்களுக்கு அவ்வளவு கோபமா. இந்த நேரத்தில் வண்டியில் கே.என.நேரு தொங்கிக் கொண்டு வந்திருந்தால் தாமக காரர்களை ஒரு ரவுண்டு கட்டி விளாசி இருப்பார்.
திமுக ஒரு பலமான இயக்கம் அந்தக் கட்சியில் உள்ளவர்களே திமுகவை வெற்றி பெறச் செய்யும் அளவுக்கு ஆற்றல் பெற்றவர்கள். அந்தளவுக்கு திமுக தொண்டர்கள் இந்தத் தேர்தலில் வெற்றியே பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் செயலாற்றுகிறார்கள்.
இதற்கு உதயநிதி போன்றவர்கள் பிரச்சாரம் செய்துதான் வெற்றி பெற வேண்டிய அவசியம் திமுகவுக்கு இருப்பதாக தெரியவில்லை.இவர்கள் எல்லாம் திமுகவுக்கு பிரச்சாரம் செய்யாமல் இருந்தாலே திமுகவுக்கு பலம்.
மேலும் இந்த மாதிரி சம்பவங்கள் தொடர்ந்தால் திமுக உடன்பிறப்புக்கள் தொய்வு அடைந்து விடுவார்கள்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















