திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், திமுக இளைஞரணி செயலாளரும், அவரது மகனுமான உதயநிதி ஸ்டாலினுக்கும் பெண்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளதாக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வரும் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களை தரக்குறைவாக விமர்சித்து வருகிறார். திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலாவை ஆபாசமாக பேசிய கருத்து தற்போது பெரும் சர்ச்சையை வருகிறது. அவருக்கு எதிராக காவல் துறையில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் குரங்கு போன்று சேட்டை பண்ணிக் கொண்டிருப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். குரங்கிற்கு கோமாளி வேஷம் போட்டா எப்படி இருக்கும் அது போன்று பேசிக் கொண்டிருக்கிறார். குரங்கு சும்மா இருக்காது; சேட்டை பண்ணிக் கொண்டே இருக்கும். அது போன்று சேட்டை பண்ணிக் கொண்டு, பெண்கள் மத்தியில் உதயநிதி ஸ்டாலினுக்கு பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஸ்டாலினைப் பொறுத்தவரை ஏமாற்றத்தின் விளிம்பிற்கே சென்று புலம்பிக் கொண்டிருக்கிறார் என்றார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சும், கருத்தும், செயலும், இன்றைக்கு தமிழ்நாட்டு மக்களால் போற்றப்படுகின்ற செயலாக இருக்கிறது. அதன் காரணமாக அதிமுகவின் வெற்றி வாய்ப்பு உள்ளது. அதிமுக ஆட்சி அமைக்கும். எடப்பாடியார் – ஓபிஎஸ் தலைமையை தமிழகமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. மீண்டும் இந்த ஆட்சி தொடரும். எடப்பாடியார் மீண்டும் இந்த ஆண்டு முதலமைச்சராக பதவியேற்பார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதியுடன் கூறினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















