இந்திய வானிலை ஆய்வு துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் / புயல் எச்சரிக்கை பிரிவின் தற்போதைய ( 10.00 மணி அளவில் ஐஎஸ்டி) நிலவர அறிக்கையின் படி கீழ் கண்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு வங்களா விரிகுடா கடல் பரப்பில் உருவான உம்பன் என அழைக்கப்படும் சூப்பர் புயல் காற்று இப்போது வடக்கு-வடகிழக்கை நோக்கி நகர்ந்துள்ளது. இதன் வேகம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 22 கிலோ மீட்டர் என்றளவில் உள்ளது. இது இப்போது 08.30 மணி வாக்கில் வடமேற்கு வங்களா வி்ரிகுடா பகுதியில் நிலைக் கொண்டுள்ளது. இது 19.8 டிகிரி அட்ச ரேகையிலும் 87.7 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலும் உள்ளது. இது ஏறக்குறைய பாராதீப் ( ஒடிஸா) அருகே 120 கிழக்கு –தென்கிழக்கில் உள்ளது. மேற்கு வங்க மாநிலம் திஹாவுக்கு தெற்கே 200 கிலோ மீட்டர் தொலைவிலும், கேப்புபாரா ( வங்க தேசம்)வுக்கு 360 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
இது வங்களா விரிகுடாவுக்கு வடக்கு-வடகிழக்கு பகுதியை நோக்கி நகரந்து மேற்கு வங்க மற்றும் வங்க தேசத்தின் திஹா (மேற்கு வங்கம்) மற்றும் சுந்தர்பன் ஹத்தியா தீவுகள் ( வங்க தேசம்)இன்று மதியம் அல்லது மாலை (20ம் தேதி மே, 2020) கரையை கடக்கும் எனத் தெரிகிறது. அப்போது காற்றின் வேகம் மணிக்கு 155-165 கிலோ மீட்டராக இருக்கும். வேகம் படிப்படியாக அதிகரித்து மணிக்கு 185 கிலோ மீட்டராக உயரலாம். இன்று மதியம் முதல் நிலச்சரிவு முறைகள் தொடங்கும். பின்னர் இது படிப்படியாக வடக்கு-வடகிழக்கில் கொல்கத்தாவை நோக்கி நகர வாய்ப்புள்ளது. டோப்ளர் ரேடார் முறையில் ( டிடபிள்யுஆர்) முறையில் தொடர்ச்சியாக விசாகப்பட்டினம் ( ஆந்திர மாநிலம்) பாராதீப் (ஒடிஸா) மற்றும் கோபால்பூர் ( ஒடிஸா) ஆகிய இடங்களில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
முன்னறிவிப்பு:
அடுத்த 25 மணி நேரத்தில் ஒடிஸாவின் வட கடலோர மாவட்டங்களில் பரவலாக ( ஆங்காங்கே) கன மழை முதல் அதிககன மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு வங்கத்தின் கடலோர பகுதியில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. மணிக்கு 100-110 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
ஒடிஸா மற்றும் கடலோர மாவட்ட பகுதிகளில் இது மணிக்கு 125 கிலோ மீட்டர் சூறாவளி காற்று வேகத்தை எட்டவும் கூடும். ஒடிஸா மற்றும் தெற்கு கடலோர மாவட்ட உள்பகுதிகளில் இது மணிக்கு 55-65 கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கும்.