திமுக விடியல் ஆட்சியில் அறிவிக்கப்படாத திடீர் பேருந்து கட்டண உயர்வு.

விடியல் ஆட்சியில் அறிவிக்கப்படாத ஒப்பந்தத்தால் தூத்துக்குடி அரசு, தனியார்,மினி பேருந்துகளில் திடீர் கட்டண
உயர்ந்தால் பொதுமக்கள் பயணிகள் மிகவும் பாதிப்படைந்தனர். விடியல் அரசு பெண்களுக்கு சில
குறிப்பிட்ட நகர பேருந்துகளில் இலவசம் என அறிவித்ததால் அரசு போக்குவரத்து கழகத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.


அது போல பெட்ரோல், டீசல் அடிக்கடி உயர்ந்ததால் அரசு பேருந்துகளில் கட்டண உயர்வு உயர்த்தப்பட வில்லை. அரசு நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்பதால் தனியார், மினி பேருந்துகள் தினசரி கலெக்ஷன் பாதிக்கப்பட்டது. பெட்ரோல், டீசல் உயர்வு கூடியதால் தனியார், மினி பேருந்துகளில் அறிவிக்கப்படாத கட்டண உயர்வு குறைந்தபட்சம் ரூ 10 என நிர்ணயம் செய்து பயணிகளிடம் வசூல் நடக்கிறது. இதனை தொடர்ந்து ஷேர் ஆட்டோவிலும் கட்டணம் கூடியது.


இதனை அறிந்த அரசு போக்குவரத்துகழக பேருந்துகள் 2 கி.மீ தூரம் வரைசெல்லும் நகர பேருந்துகளில் ரூ 5 கட்டணத்தை ரூ 7. ரூ 10 என நிர்ணயம்
செய்து வசூலிக்கிறது. 1 கி.மீ தூரத்திற்கு ஒரு ரூபாய் கூடுதல் நிர்ணயம் செய்யப்படுகிறது. மறைமுகமாக விடியல் அரசு பொதுமக்கள்,
பயணிகளிடம் இந்த கட்டண உயர்வை உயர்த்தியதால் ஏழை நடுத்தர பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


அரசு பேருந்துகளில் கட்டண உயர்வை உயர்த்தி உத்திரவு பிறப்பிக்காத நிலையில் பேருந்துகள், மினி பேருந்து மற்றும் ஷேர்
ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளை கண்காணித்து இவர்கள் மீது வட்டார போக்குவரத்துறை
அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி இணை செயலாளர்
முனியசாமி கேட்டுக் கொண்டார்.

செய்தி நன்றி ;- அம்மா எக்ஸ்பிரஸ்

Exit mobile version