மத்திய உள்துறை அமைச்சர் நேற்று குஜராத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் விஜய் ரூபனி மற்றும் பலர் கலந்துகொண்டார்கள் இந்த நிகழ்ச்சி குஜராத் காந்தி நகரில் தேசிய தடய அறிவியல் பல்கலையில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது: மக்கள் எப்போதும் காவல்துறை மீது இரண்டு குறைகளையே மட்டுமே கூறி வருகிறார்கள். அதில் ஒன்று, புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுப்ப தில்லை, காவல்துறை தங்களின் வரம்புக்கு மீறி செயல்படுகின்றனர். என்ற குற்றச்சாட்டு தான் கூறிவருகிறார்கள்.
காவல்துறையினர் நடுநிலையோடும், நியாயமாகவும் செயல்பட, குற்ற விசாரணையில் சரியான சாட்சிகள் கிடைக்க வேண்டும். அறிவியல்பூர்வமாக இதை நாம் அணுக வேண்டும்.அந்தக் காலத்தில் கூறுவதுபோல மூன்றாம் நிலை சித்ரவதை, இனி பயன்படாது. அதில் இருந்து நாம் வெளியே வர வேண்டும்.
தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப, ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனை சட்டம், மற்றும் சி.ஆர்.பி.சி., எனப்படும் குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் போன்ற சட்டஙகளில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
இது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.ஆறு மாதங்களுக்கு மேல் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ள குற்றங்களில், தடய அறிவியல் விசாரணையை கட்டாயமாக்க வேண்டும். அதற்கு தேவையான பயிற்சி பெற்றவர்கள் அதிகளவில் தேவை. அறிவியல்பூர்வமான விசாரணையின் வாயிலாக எந்த குற்றத்திலும் சரியான, நியாயமான சாட்சிகள், ஆதாரங்கள் கிடைக்கும். கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றினார். உள்துறை அமைச்சர் அமித்ஷா.