தமிழகத்தில் பிரதமர் மோடி பதவியேற்றத்திலிருந்து தவறான நோக்கில் விமர்சனம் செய்வது வழக்கமாய் கொண்டுள்ளது தனியார் தொலைக்காட்சிகள். மேலும் படங்களிலும் காட்சிகள் வைக்கப்படுவது வழக்கமாகி வருகிறது. இதுவரை கருத்து சுதந்திரம் என்று படைப்பாளிகள் கம்பு சுத்தி வந்தார்கள். இனி பிரதாமரையோ அல்லது தாய்நாட்டை அவமதித்தால் சும்மா இருக்கப்போவதில்லை என சட்டையை சுழற்றியிருக்கிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
ஜீ நெட்ஒர்க் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல ரியாலிட்டி ஷோ நடைபெற்று வருகிறது. அந்த தொலைக்காட்சியில் குழந்தைகள் உட்பட பலர் பங்கு பெரும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த ரியாலிட்டி சோ வில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து தவறான கண்ணோட்டத்தில் விமர்சனம் செய்வது போன்ற ஒரு காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது,
இந்த வீடியோவை பிரதமர் மோடிக்கு எதிராக இயங்கும் சமூக வலைத்தளங்கள் பக்கங்களில் பதிவிட்டு ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார்கள். மேலும் சமூக வலைதளபக்கங்களில் பொழுது போக்கு நிகழ்ச்சியான என பார்ப்பவர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிறு குழந்தைகளை வைத்து பிரதமர் மோடி மற்றும் பணமதிப்பிழப்பு குறித்து அரசியல் சார்ந்த செயல்களும் இடம்பெற்று இருப்பது கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. இதில் மிகப்பெரும் காழ்ப்புணர்ச்சி இருப்பதாகவே தெரிகிறது.
பிரதமர் மோடி பணமதிப்பு இழப்பு செய்யப்பட்டதன் பயன்களை மறைத்து அதனை அப்படியே முட்டாள் தனம் என நகைச்சுவையாக விமர்சனம் செய்துள்ளனர். பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் செயல் என பலரும் கருத்து வெளியிட்டு வருகிறார்கள். டிஜிட்டல் இந்தியா மூலம் எவ்வளவு கருப்பு பணம் ஒழிக்கப்பட்டுள்ளது என்பதை சொல்ல வேண்டியது தானே?? UPI, BHIM பற்றி உலக நாடுகளே இந்தியாவை பாராட்டி வருகிறது.
ஒரு நொடியில் ஒரு APP-இன் மூலம் சுலபமாக பண பரிவர்த்தனை செய்ய முடிகிறது. பேரிடர் காலத்தில் இது எந்த அளவிற்கு உதவியது என்பது அனைவருக்கும் தெரியும்.ஊடங்களை பிடித்த பீடை மெல்ல தற்போது இது போன்ற ரியாலிட்டி ஷோ விலும் தொற்ற ஆரம்பித்துள்ளது.
இதனை தொடர்ந்து தொலைக்காட்சி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரியம் மொபைலில் ZEE 5 app இருந்தால் uninstall செய்யுங்கள். அந்த app இருந்தாலும் இல்லையென்றாலும் App store-ல் சென்று ZEE 5 என்று type செய்து ஒரு ஸ்டார் கொடுத்து complaint கொடுங்கள்…என பலரும் சமூகவலைத்தளத்தில் பதிவிட தொடங்கினார்கள்.
இது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் பார்வைக்கு கொண்டுசெல்லப்பட்டது. உடனே தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடர்பாக மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் முருகன் அவர்களிடம் எடுத்து கூறியுள்ளார். அண்ணாமலை கூறியதை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார். மத்திய இணையமைச்சர் முருகன். இதனால் பல சேனல்கள் சற்று பதட்டத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது :
மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு @Murugan_MoS அவர்கள் தொடர்பு கொண்டு தமிழகத்தில் ஒரு ரியாலிட்டி டிவி ஷோவில் பாரத பிரதமர் அவர்கள் மாண்பை குறைப்பது போல் சில காட்சிகளை வைத்திருப்பதைப் பற்றி கேட்டறிந்தார் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்!அவருக்கு என் நன்றிகள்