திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் தடை செய்யப்பட்ட அமைப்பு சார்பில் நடந்த கருத்தரங்கில் ஹிந்து அமைப்பினர் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நாளிதழான புதியவிடியல் இணை ஆசிரியர் ரியாஸ்அகமது நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் சிறப்புரை பெரியாரும் இஸ்லாமும் என்ற தலைப்பில நிகழ்ச்சி ஏற்பாடு பேரா.சாமுவேல்ஆசிர்ராஜ் நிகழ்ச்சியில் ‘அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்’ என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கருத்தரங்கில் சர்ச்சைக்குரிய விஷயங்கள் பேசப்படலாம் என்று சந்தேகப்பட்ட பா.ஜ.க அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், ஹிந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள், ஹிந்து முன்னணி மாநில தலைவர் குற்றாலநாதன் தலைமையில் ஒன்று கூடினர். நிகழ்ச்சியை ரத்து செய்ய கோரிய அவர்கள், நாங்களும் பங்கேற்போம் என தெரிவித்தனர்.
ஆனால், மாணவர்களுக்கு மட்டும் தான் அனுமதி எனக்கூறி, உள்ளே செல்லகாவல் அனுமதி மறுத்தனர். இதனால், அவர்கள் ஆளுநரிடம் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பி உள்ளது. பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கருத்தரங்கில் என்ன பேசினார்கள்? என்ற தகவல் முழுமையாக வெளியாகவில்லை.
மேலும் ஜார்கண்ட் மாநிலத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நாளிதழான புதியவிடியல் இணை ஆசிரியர் ரியாஸ்அகமது நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் பங்கேற்றது எப்படி என்ற கேள்வியும் மேலும் பயங்கரவாத அமைப்புகள் சுதந்திரமாக நிகழ்ச்சி நடத்துவது எவ்வாறு இதற்கு தமிழக காவல்துறை எப்படி அனுமதி அளித்தது தமிழக அரசு கண்டுகொள்ளாமல் விட்டதற்கு காரணம் என்ன என பல கேள்விகள் எழுந்துள்ளது.
மேலும் தமிழகத்தில் மாவோயிஸ்ட்கள் பயங்கரவாத குழுக்கள் அதிக அளவில் இருப்பதாக உளவுத்துறை கூறியும் இது போன்ற செயல்களை கண்டுகொள்ளாமல் இருப்பதன் நோக்கம் என்ன? இது குறித்து ஆளுநரிடம் புகார் தெரிவித்தால் தமிழக காவல்துறை அமைச்சராக இருக்கும் முதல்வர் மு.க ஸ்டாலினிடம் விசாரணை மேற்கொள்ளவும் உளவுத்துறை தயங்காது.
தமிழகத்தில் தலை வெட்டி கொலை, ஓட ஓட விரட்டி கொலை என தினமும் செய்திகள் வரும் நிலையில் சட்டம் ஒழுங்கு தற்போதே ஆட்டம் கண்டுள்ளது. இந்த நிலையில் தடை செய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நாளிதழான புதியவிடியல் இணை ஆசிரியர் ரியாஸ்அகமது நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் பங்கேற்றது திமுக அரசிற்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.