தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து பட்டியலினத்தவர் மீதான சாதி ரீதியான தாக்குதல்கள் அதிகமாகி வருகின்றது என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. அதுவும் திமுக அமைச்சர்களே இச்செயலில் ஈடுட்டுள்ளார்கள. மேலும் நாங்குநேரி பள்ளியில் பட்டியலின வகுப்பினை சேர்ந்த மாணவர் மற்றும் அவரது தங்கை தாக்கப்பட்ட சம்பவம், கழுகுமலையில் பட்டியலின மாணவர் மீது மாற்று சமுதாயங்களைச் சேர்ந்த மாணவர்கள் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் வேங்கைவயல் சம்பவம் என தொடர்ந்து பட்டியலின மக்கள் திமுக ஆட்சியில் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள கொரனூர் கிராமம். இந்த கிரமாம் மலைகளின் ராணி என போற்றும் ஊட்டியிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. கொரனுர் கிராமத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 35 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது பிக்கப்பத்தி மந்து என்ற தோடர் பழங்குடி கிராமம். இந்த இரண்டு கிராமங்களுக்கும் முறையான சாலை வசதி இல்லை தங்களின் போக்குவரத்து தேவைக்கு எப்பநாடு கிராமம் வரை இயக்கப்படும் அரசு பேருந்து சேவையை மட்டுமே நம்பி இருந்தனர்.
எப்பநாட்டில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் அமைந்துள்ள கொரனூர் வரை அரசு பேருந்தை இயக்கினால் கொரனூர் கிராம மக்கள் பயனடைவதுடன், பிக்கப்பத்தி மந்து மக்களின் நடைப்பயணம் 4 கிலோமீட்டரில் இருந்து 2 கிலோமீட்டராக குறையும் என்பதால், எப்பநாடு வரை இயக்கப்படும் அரசு பேருந்து சேவையை 2 கிலோமீட்டர் நீட்டித்து கொரனூருக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் இயக்க வேண்டும் என இரண்டு கிராம மக்களும் பல ஆண்டுகளாக போராடி வந்தனர்.
இவர்களின் கோரிக்கையை ஏற்ற மாவட்ட நிர்வாகம், கொரனூர் வரை அரசு பேருந்து சேவையை நீட்டித்து உத்தரவிட்டது. ஊட்டியில் அண்மையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கொரனூர் கிராமத்திற்கான புதிய பேருந்து சேவையை போக்குவரத்துத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். அன்றைய தினம் மாலை ஊட்டியிலிருந்து எப்பநாட்டிற்கு பேருந்து சென்ற நிலையில், அங்கிருந்து கொரனூருக்கு பேருந்தைச் செல்லவிடாமல் எப்பநாடு மக்கள் தடுத்துள்ளனர்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பழங்குடி மற்றும் பட்டியல் இன மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது, `உங்கள் கிராமத்திற்கு பேருத்தை அனுப்ப முடியாது’ என இறங்கி நடக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். அச்சமடைந்த அந்த மக்கள் நடந்தே சென்றுள்ளனர். அரசு பேருந்தை தங்கள் கிராமத்திற்கு வரவிடாமல் தடுக்கும் எப்பநாடு கிராம மக்கள்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் பழங்குடி, பட்டியல் இன மக்கள் மனு அளித்துள்ளனர்.
ஆட்சியரின் கண்டிப்பான உத்தரவின் பேரில் நேற்று மாலை கொரனூர் சென்ற அரசு பேருந்தை எப்பநாட்டிலியே படுகர் இன மக்கள் தடுத்து நிறுத்தயுள்ளனர். பேருந்தை இயக்கவிடாமல் நள்ளிரவு வரை சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
கொரனூருக்கு பேருந்து செல்ல அனுமதிக்க முடியாது என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு உத்தரவின் அடிப்படையில் தங்களின் கிராமத்திற்கான பேருந்து சேவையை தடையின்றி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து தெரிவிக்கும் பாதிக்கப்பட்ட மக்கள், ” அடிப்படை தேவைக்காக வெளியில் செல்ல இரண்டு கிராம மக்களும் 6 முதல் 8 கிலோமீட்டர் நடக்க வேண்டியிருந்தது. பேருந்து சேவையை நீட்டிக்க வலியுறுத்தி பல ஆண்டுகள் போராடினோம். ஒருவழியாக இப்போது தான் அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. பட்டியல் இன மக்கள் வாழும் கிராமத்தின் பெயரில் அரசு பேருந்து இயக்குவதையோ எங்கள் ஊருக்கு பேருந்து வந்து செல்வதையோ பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த படுகர் இன மக்கள் விரும்புவதில்லை.
இதன் காரணமாக எங்களை இப்படி வஞ்சிக்கிறார்கள். ஆனால், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளோ எங்களை அனுசரித்துப் போகச் சொல்கிறார்கள். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. தீண்டாமையைக் கடைப்பிடித்து அரசு பேருந்து சேவையை தடுக்கும் இவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்றனர்.
இந்த குற்றச்சாட்டு குறித்து தெரிவித்த எப்பநாடு கிராம மக்கள் சிலர், “எங்கள் ஊருக்கான பேருந்தை அப்படியே இயக்குங்கள். அவர்கள் கிராமத்திற்கு என்று புதிதாக வேறு பேருந்தை இயக்குங்கள் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை ” என்றனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















