மும்பை மாஃபியா கான்களிடம் இருந்து பாலிவுடை மீட்க யோகியின் அதிரடி.
தற்பொழுது இந்திய சினிமாத்துறையின் தலைநகராக மும்பை திகழ்க்கின்றது இதை மாற்ற உத்திரபிரதேசத்தை பாலிவுட்டின் தலைநகராக மாற்றும் முயற்சியாக, பிரமாண்டமானதிரைப்பட நகரமாக உருவாக்கும் மிகபெரிய திட்டம் தொடர்பாக, பாலிவுட்டை சேர்ந்த முக்கியமான சில நபர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளார்.
பிலிம் சிட்டி தொடர்பான ஆலோசனையில் கலந்து கொள்ள பல முக்கிய நட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அவர்களின் இல்லத்திற்கு செல்கிறார்கள்.
உத்திரபிரதேசத்தில் நாய்டாவிற்கு அருகில் உள்ள கிரேட்டர் நாய்டாவில், இந்த பிரம்மாண்டமான பிலிம் சிட்டி அமைய உள்ளது.
முன்னதாக மீரட் பிரிவின் மேம்பாட்டுத் திட்டங்களை மறுஆய்வு செய்வதற்கான கூட்டத்தின் போது முதல்வர் யோகி ஆதித்யநாத், நொய்டா, கிரேட்டர் நொய்டா அல்லது யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் இதற்கான பொருத்தமான இடத்தை பரிந்துரை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
திரைப்பட நகரத்தை நிறுவுவதற்கான திட்டத்தை யமுனா அதிவேக நெடுஞ்சாலை தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் (YEIDA) மாநில அரசுக்கு அனுப்பியுள்ளது.
யமுனா அதிவேக நெடுஞ்சாலையில், ஜேவரில் அமைந்துள்ள நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு 6 கி.மீ தூரத்தில் உள்ள் இடம் திரைப்பட நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள்வெளியாகின்றன. விமான நிலையம் அருகில் இருப்பதாலும், தேர்தெடுக்கப்பட்ட இடத்தின் அருகில், கவுதம் புத்தா இண்டர்நேஷன்ல் சர்க்யூட் எனப்படும் கார் பந்தயத்திற்கான இந்தியாவின் ஃபார்முலா ஒன் ரேஸ் ட்ராக் அமைந்துள்ளாதாலும் , இந்த குறிப்பிட்ட இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பை மாஃபியா கான்களிடம் இருந்து பாலிவுடை மீட்க யோகியின் அதிரடி திட்டம் இன்னும் சிலநாட்களில் செயல்பட தொடங்கும்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















