உ.பி அரசின் பாணியில் ஹரியானா அரசு ! கலவரம் செய்ய உதவியர்களின் ஹோட்டல் இடிப்பு!
ஹரியானாவின் நூ மாவட்டத்தின் விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தினர் பேரணி நடத்தினர். இப்பேரணி மீது சில இஸ்லாமிய தீவீரவாதிகள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து அங்கு கலவரம் ஏற்பட்டது
இந்நிலையில் ஹரியானாவின் நுாஹ் மாவட்டத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் ஊர்வலம் நடைபெற்றபோது , கற்களை வீசி தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட, பிரபல ஹோட்டல் உள்ளிட்ட சட்ட விரோத கட்டடங்களை அம்மாநில அரசு நேற்று இடித்து தள்ளியது.
இந்த கலவரம் அண்டை மாவட்டமான குருகிராமுக்கும் பரவியது. இதில், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த இருவர் உட்பட ஆறு பேர் பலியாகினர். இது குறித்து சிறப்பு விசாரணை குழு விசாரித்து வருகிறது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து, நம் நாட்டுக்குள் சட்ட விரோதமாக குடியேறி, நுாஹ் மாவட்டத்தில், அரசு நிலங்களை ஆக்கிரமித்து வசித்து வந்தவர்களுக்கு, இந்த வன்முறையில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வங்க தேசத்திலிருந்து சட்ட விரோதமாக இந்தியா வந்து டவுரு என்ற இடத்தில், குடிசைகள் அமைக்கப்பட்டு சில சட்ட விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்ததால் 250க்கும் மேற்பட்ட குடிசைகள் இடிக்கப்பட்டன. இதைஅடுத்து, 2.6 ஏக்கர் பரப்பளவில் அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டன.
இந்நிலையில், நுாஹ் மாவட்டத்தில் சட்ட விரோத கட்டடங்களை இடிக்கும் பணி நேற்று நான்காவது நாளாக நடந்தது. இதன்படி, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு நடத்தப்பட்ட ஊர்வலத்தின் மீது , கற்களை வீசி தாக்குதல் நடத்தி கலவரத்தை ஏற்படுத்திய குண்டர்கள் பயன்படுத்தப்பட்ட சஹாரா ஹோட்டலை, அம்மாவட்ட நிர்வாகம் இடித்துத் தள்ளியது. மேலும், சட்ட விரோதமாக கட்டப்பட்ட ஏராளமான கடைகளும் இடிக்கப்பட்டன.
இது குறித்து ஹரியானா காவல்துறை கூறியதாவது:
விஷ்வ ஹிந்து பரிஷத் ஊர்வலம் நடந்த போது சஹாரா ஹோட்டலின் மேல்தளத்தில் இருந்து, குண்டர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள் .இதன் காரணமாக அங்கு வன்முறை ஏற்பட்டது இதனை தொடர்ந்து வன்முறைக்கு பயன்படுத்தப்பட்டசகாரா ஹோட்டல் இடிக்கப்பட்டது.மேலும், இடிக்கப்பட்ட கடைகளின் உரிமையாளர்களுக்கு கலவரத்தில் தொடர்பு உள்ளது.
பல்வேறு பகுதிகளில், சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள 70க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. கைது நடவடிக்கைக்கு பயந்து சிலர் தலைமறைவாகி உள்ளனர். கலவரம் தொடர்பாக இதுவரை, 216 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹரியானா அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது :சமீபத்தில் நடந்த கலவரத்தின் போது, நுாஹ் மாவட்டத்தில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பெரிய மோசடி மற்றும் பிற குற்றங்கள் தொடர்பான ஆவணங்களின் ஆதாரங்களை அழிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் சம்பந்தப்பட்டோர் யாரும் தப்பிக்க முடியாது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.