தீவிர CSI கிறிஸ்தவராக இருந்த ஆபிரகாம் என்ற அண்ணாச்சி குடும்பத்தோடு தாய்மதம் திரும்பியுள்ளார்.ஆலங்குளத்தில் புதியதொர் மறுமலர்ச்சியை புதிய ஒரு பாதையை கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்துவாக மாறுபவர்களுக்கு வழி வகுத்துள்ளார்
அதுமட்டுமல்லாமல் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகனுக்கு மிகப் பெரிய கோவில் ஒன்றை கட்டியுள்ளார். இஸ்ரேலிய பாதையில் சென்று கொண்டிருந்தவர் இன்று தமிழ் கடவுள் முருகனின் திருப்பாதம் பணிந்தார்.
தீவிர ஈடுபாடு மற்றும் பயபக்தியுடன் இந்த முருகன் கோவிலை கட்டி வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானை பிரதிஷ்டை செய்துள்ளார். கரோனா வைரஸ் தொற்று காலமென்பதால் தன் குடும்பத்தினரை மட்டும் வைத்து எளிமையான முறையிலே சிறப்பாக முருகப்பெருமானின் பிரதிஷ்டை செய்துள்ளார்.
இதுபோன்று ஆலங்குளத்தில் தாய்மதம் திரும்ப விரும்பும் குடும்பங்கள் அனைத்தையும் தொடர்புகொண்டு தாய்மதம் திருப்பும் வேலையை இந்துமுன்னணி தொடங்கும்.
இந்த அண்ணாச்சி ஆபிராம் போல தாய்மதம் திரும்ப விருப்பமுள்ளவர்கள் ஆலங்குளம் இந்து முன்னணியை தொடர்பு கொள்ளுங்கள். எத்தனையோ பாதிரியார்கள் இவரை தொடர்பு கொண்டு நீங்கள் இந்துவாக மாற வேண்டாம் என்று கெஞ்சி கேட்டுள்ளனர். அதையெல்லாம் அவர் கண்டுகொள்ளவில்லை. நீங்கள் இந்துவாக மாறி விட்டால் உங்களை பார்த்து இன்னும் பலரும் இந்துவாக மாறி விடுவார்கள் நீங்கள் போக வேண்டாமென பாதிரியார்களும் பாதிரியார்களுக்கு வேண்டியவர்களும் கெஞ்சிக் கேட்டுப் பார்த்தனர்.எதையும் அவர் கண்டு கொள்ளவில்லை.
தந்தைக்கே உபதேசம் செய்த முருகனின் திருப்பாதம் பணிந்த அந்த தொழிலதிபர் பாதிரியார்களின் உளறல்களை மதிக்கவில்லை.கோவில் கட்டினார். சிறப்பாக முருகனையும் வள்ளி தெய்வானையோடு பிரதிஷ்டை செய்தார். புற்றீசல் போல ஆலங்குளத்தை முழுக்க கிறிஸ்தவம் ஆக மாற்ற வேண்டும் என துடிக்கும் மதமாற்ற சக்திகளுக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையை போட்டுள்ளார் தொழிலதிபர்.
இது இந்துக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. இந்துமதம் எப்போதும் யாரையும் கஷ்டப்படுத்துவது இல்லை. மனதில் நினைத்து மனமுருக வேண்டினால் உருகி விடுவார் அந்த கந்தப்பெருமான். கந்தனின் அருளால் தீவிர மதமாற்றம் கும்பல்கள் திருந்த வேண்டும் .
ஆலங்குளத்தில் இருந்து ஒவ்வொரு ஊர் கிராமங்களுக்கும் மத மாற்றம் செய்வதற்காக கிறிஸ்தவ ஆண்கள் மற்றும் பெண்கள் சம்பளத்திற்காக. சென்று கொண்டிருக்கின்றர்.இனி இந்த வேகம் குறையும். தாய்மதம் திரும்ப விரும்பும் கிறிஸ்தவர்களை அடையாளம் காட்டுங்கள் இந்துக்களே !
தாய்மதம் திரும்ப விரும்பும் அனைத்து கிறிஸ்தவர்களையும் இந்து மதம் அன்புடன் வரவேற்கிறதது. ஆலங்குளத்தில் ஆடி மாதம் என்றாலே கிறிஸ்தவர்களும் இந்துக்களும் இணைந்து காரையார் மலையிலுள்ள சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்வது வழக்கம். இதை உடைக்க வேண்டும் மக்களுக்குள் பிரிவினையை உண்டாக்க வேண்டும் என நினைத்த பாதிரியார்கள் ஆடி அமாவாசை அன்று ஸ்தோத்திர பண்டிகை நடத்தினர். ஆனால் கிறிஸ்தவர்கள் அனைவரும் ஸ்தோத்திர பண்டிகை கலந்துகொள்ளாமல் அனைவரும் சொரி முத்தையனார் கோவில் சென்று விட்டனர். கிறிஸ்த்வ பண்டிகையில் யாரும் இல்லை.பாதிரியார்களின் பிரிவினைவாத போக்கை அன்று அய்யனார் தடுத்தார். இன்று முருகப் பெருமான் ஒருவரை இந்துவாக தாய்மதம் திரும்ப வைத்துள்ளார்.
ஆலங்குளம் இந்து முன்னணி