இன்றைய அரசியல் சூழ்நிலையில்பட்டியலின வகுப்பை சேர்ந்த ஆ.ராசா திமுக பொதுச்செயலாளராக ஆவதற்கான கட்டாயத்தை தமிழக பா.ஜ.க ஏற்படுத்தி இருந்தது. காரணம் பட்டியல் இனத்தைச் சார்ந்த முருகன் அவர்களை பாஜக தலைவராக நியமித்துதான். கலைஞர் இல்லாத சமயத்தில் புதிய அரசியல் சூழ்நிலையில் திமுகவின் பதவி நியமனங்கள் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதுவும் தி.மு.க உடன்பிறப்புகள் மத்தியிலும் அந்தக் கட்சியில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் மத்தியில் ஆ.ராசாவின் நியமனம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. பொது செயலாளர் என்பது முடியாது அது அதிகாரம் மிக்க பதவி அதனால் அதிகாரமில்லாத துணை பொதுச்செயலாளர் பதவி கொடுத்தார்கள். இதற்கு கூட காரணம் பாஜக தான். திமுகவில் தாழ்த்தப்பட்டோருக்கு குரல் எழுப்பியது தமிழக பாஜக
தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலராக இருந்த ஆ.ராசா துணைப் பொதுச் செயலராகி உள்ளதால், அவர் வகித்த பதவிக்கு, சீனியர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. எப்போதும் போல் முடிவு எடுப்பது தாமதமாகி வருகின்றது இதற்கு காரணம் இளவரசர் உதயநிதி தான்.
தற்போது, திருச்சி சிவா மட்டும் கொள்கை பரப்பு செயலராக உள்ளார் ஆ.ராசா வகித்த பதவிக்கு, யாதவர் சமுதாயத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், பெரிய கருப்பன், முன்னாள் எம்.எல்.ஏ.,வான, .வைத்தியலிங்கம் உட்பட ஐந்து பேர் மத்தியில், கடும் போட்டி நிலவுகிறது என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் சீனியர் என்பது தேவையில்லை நல்ல பேச்சாற்றலை உடையவராகவும் மக்களை கவரக்கூடியவர் தான் அந்த பதவிக்கு வரவேண்டும் என உதய் அண்ணா சொல்லிவிட்டாராம். இதனால் சீனியர்கள் அப்செட்டில் இருக்கிறார்கள். எல்லாம் உதயநிதி என்றால் நாங்கள் எதற்கு என அறிவாலய வாசலில் குமுறுகிறார்களாம். மேலும் பேசாமல் வேறு கட்சிக்கு சென்று விடலாம் என்ற யோசனையில் உள்ளார்களாம் சீனியர்ஸ். மேலும் கரு பழனியப்பனை இந்த பதவியில் உட்கார வைக்க ஆசைப்படுகிறார் உதய் அண்னன்
நிலைமை இப்படி இருக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திமுகவில் இணைந்த சம்பவம் அரேங்கேறியுள்ளது திமுகவின் தேர்தல் வியூக நிபுணர் பிகாரி, இந்திக்காரர், பார்ப்பனர், பிரசாந்த் கிஷோரின் ஆலோசனை படி, தி.மு.க.,வில், ‘எல்லாரும் நம்முடன்’ என்ற, இணையதளம் வாயிலாக, உறுப்பினர் சேர்க்கை ஜரூராக நடந்து வருகிறது. தினந்தோறும் பல ஆயிரம் உறுப்பினர்கள் சேர்ந்து வருவதாக, கட்சி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், உறுப்பினர் சேர்க்கையில், பெயர், முகவரி போன்றவற்றுக்கு, ஆதாரம் எதுவும் தேவையில்லை; போட்டோவும் கட்டாயமில்லை.
இதனால், கட்சித் தலைமையை ஏமாற்றுவதற்காக, போலி பெயர்களில், உறுப்பினர் பதிவு செய்யப்படுகிறது என்ற புகார் எழுந்துள்ளது. ஒரே நபர், முகவரியை மாற்றி கொடுத்து, பலமுறை உறுப்பினராகும் கூத்தும் அரங்கேறுகிறது.தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறுகையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயரில், தி.மு.க.உறுப்பினர் சேர்க்கை நடந்திருப்பது அம்பலமாகி, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது’ என்றார். இன்னொரு உடன்பிறப்பு ஒசாமாவும் திமுக உறுப்பினர் ஆனார் என அதிர்ச்சி செய்தியை வெளியிட்டார்.