“கலவரம் தொடர்பான சம்பவங்களில்” இறக்கும் கலவரக்காரர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கமுடியாது என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி.
செவ்வாயன்று உத்திரபிரதேச மாநில சட்டசபையில் எழுத்துப்பூர்வ பதிலளித்த , உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநிலத்திற்கு எதிரான கலகங்களில் வீதிகளில் இறந்த மக்களுக்கு நிவாரணம் வழங்க எந்தவிதமான ஏற்பாடுகளும் இல்லை என்று கூறினார். “ஜி நஹின் (இல்லை, தயவுசெய்து),” பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து விசாரிக்கப்பட்டபோது முதல்வர் பதிலளித்தார்.
கடந்த ஆறு மாதங்களில் ‘கலவரம் தொடர்பான சம்பவங்களில்’ 21 கலகக்காரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் முதல்வர் குறிப்பிட்டார். ஆர்ப்பாட்டக்காரர்களால் கல் வீசியதில் 400 காவல்துறையினர் காயமடைந்தனர், 61 போலீசார் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தனர்.
நாங்கள் காங்கிரஸ், கெஜ்ரிவால் போன்றவர்கள் அல்ல.
செவ்வாயன்று, சமாஜ்வாடி எம்.எல்.ஏ ராகேஷுக்கு கேட்ட கேள்விக்கு முதல்வர் பதிலளித்தார், மாநிலத்தில் சி.ஏ.ஏ எதிர்ப்பு கலவரக்காரர்கள் யாரும் போலிஸ் தோட்டாக்களால் இறக்கவில்லை என்று தெளிவுபடுத்தினார். கடந்த வாரம் சட்டசபையில் தனது உரையில் இந்த வன்முறை சம்பவங்களை குறிப்பிடுகையில், “கலகக்காரர்களால் தான் கலகக்காரர்கள் கொல்லப்பட்டனர்” என்று முதல்வர் கூறியிருந்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து, CAA எதிர்ப்பு கலவரக்காரர்கள் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வீதிகளில் இறங்கினர். கும்பல் வன்முறை நாடியதுடன், காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக வெறியாட்டம் ஆடினர் . காவல்துறை அதிகாரிகளைத் தாக்க நோக்கி கல் வீசியதில் பலகாவல்துறையினர் பலத்த காயம் அடைந்து சிகிச்சைபெற்று வருகின்றனர்.
கலவரத்தால் பல பொது சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளது ,இதற்கு ஈடாக உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) எதிர்ப்புக்கும் கலவரக்காரர்களை அடக்க கடுமையான நடவடிக்கைகளை அறிவித்ததோடு, ஒவ்வொரு கலகக்காரரின் சொத்தையும் பறிமுதல் செய்வதாகவும், சேதமடைந்த பொதுச் சொத்தை சரிசெய்ய அதன் நிதியைப் பயன்படுத்துவதாகவும் உறுதியளித்தார்.
CAA எதிர்ப்பு போராட்டத்தின் போது மாநிலத்தில் பொது சொத்துக்களை சூறையாடிய கலகக்காரர்களுக்கு சொந்தமான குறைந்தபட்சம் 498 சொத்துக்களை உத்தரபிரதேச அரசு அடையாளம் கண்டுள்ளது.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டவட்டமாக கூறியுள்ளார்.