சென்னை துறைமுகத்தில்,கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்க்கு உதவும் வகையில் 3 ஆக்ஸிஜன் செறிவூட்டியை ஜெயின் சங்கத்திடம் பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வம் வழங்கினார்
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில்
தமிழகத்தில் அதிகமாக இருப்பது வேதனை அளிப்பதாக கூறினார், மேலும் தமிழக அரசு, மத்திய அரசை குறை கூறுவதை நிறுத்திவிட்டு மக்களை எப்படி காப்பற்றுவது என சிந்திக்க வேண்டும் என தெரிவித்தார்,
எதிர் கட்சியாக இருக்கும் போதுதடுப்பூசி குறித்து அவதுறு பரப்பியதே தற்போதைய ஆளும் கட்சி தான் என குற்றம்சாட்டினார்.வாக்களிக்காத மக்களுக்கும், அனைத்து தரப்பினரை அரசு அரவனைத்து செல்லவேண்டும் என கூறிய அவர், கொரோனா தொற்றுசென்னையில் குறைந்து வருவது மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தார்.மாநில அரசு உடன் இணைந்து செயல்பட தமிழக பாஜக தயாராக உள்ளதாக இவ்வாறு கூறினார்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















