மலையாள தேசத்தில் “ஒற்றப்பிலாவில் நீலகண்டன் வேலு குறுப்பு” (O.N.V) என்றொரு கவிஞர் இருந்தார், நம்ம ஊர் பட்டுகோட்டை கல்யாண சுந்தரம் போல் இடதுசாரி, நல்ல புலவர் எழுத்தாளர் என பெரும் அடையாளத்தை பெற்றார்
(பெயர் நீலகண்டன் வேலு,ஒற்றபிலா என்பது அவரின் ஊர், குரூப் என்பது அவரின் சாதி மிக பிற்படுத்தபட்ட சாதி )அன்னாரின் படைப்புள் கொண்டாடபட்டன, சாஹித்ய அகாடமியினை தாண்டி ஞான பீட விருது பெற்ற பெரும் சிறப்பாளர், அவர் 2017ல் இறந்தார்
அவர் நினைவாக ஆண்டு தோறும் கேரள அரசு இலக்கிய விருது வழங்கும் இந்த விருது தமிழக கவிஞர் என சொல்லபடும் வைரமுத்துவுக்கு இம்முறை வழங்கபட்டிருக்கின்றது, கேரளம் ஒன்றும் தமிழகம் அல்ல என்பதால் அங்குள்ள பலர் வரிந்து கட்டுகின்றனர், இதில் நடிகை பார்வதி முக்கியமனவர்பார்வதி தமிழ் படங்களில் நடித்திருக்கின்றார், கேரளாவில் சின்மயி போல் பலரின் முகமூடியினை கிழித்து கொண்டிருக்கின்றார்
இந்த கேரளத்தின் சின்மயி வைரமுத்துவுக்கு விருது கொடுக்கபட்டதை எதிர்க்க விஷயம் பற்றி எரிகின்றது
மிக பெரிய மானுடவாதியும், பெண் விடுதலையும் சொன்ன கவிஞனின் விருதை பாலியல் சர்ச்சையில் சிக்கிய வைரமுத்துவுக்கு கொடுப்பது ஏற்றுகொள்ள முடியாது என்கின்றது கேரள குரல்கள் சரி.
அவரைத் தொடர்ந்து பல்வேறு எழுத்தாளர்களும், பெண்ணியவாதிகளும் வைரமுத்துவுக்கு விருது அறிவிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்தநிலையில், வைரமுத்து விருது வழங்குவது தொடர்பாக மறுபரிசீலனை செய்யவுள்ளதாக ஓ.என்.வி கலாச்சார மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தி இந்து நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள ஓ.என்.வி கலாச்சார மையத்தின் தலைவரும் மலையாள திரையுலகின் மிகச் சிறந்த இயக்குநருமான அடூர் கோபாலகிருஷ்ணன், ‘வைரமுத்து மீது இருக்கும் பாலியல் புகார் குறித்து நடுவருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம்.
வைரமுத்து எழுத்தை மட்டும் கணக்கில்கொண்டு அவருக்கு விருது வழங்கும் முடிவை நடுவர்கள் எடுத்திருக்கலாம். இந்த விருது தொடர்பாக ஏற்கெனவே வைரமுத்துவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூட்டம் நடத்தி விரைவில் முடிவு செய்யப்படும்’ என்று தெரிவித்தார்.
ஸ்டான்லி ராஜன்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















