நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் , கோவை தெற்கு தொகுதியில் பா.ஜ.கவின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிட்டார். அவருக்கு எதிராக மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல் போட்டியிட்டார். இருவரும் தமிழக மக்களுக்கு நல்ல பரிச்சயம் ஆனவர்கள் என்பதால் கோவை தெற்கு தொகுதி ஸ்டார் தொகுதியாக மாறியது. போட்டி கடுமையகவே இருந்தது.
இறுதியில் கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார். வாக்கு எண்ணிக்கையின் போது இந்திய அளவில் கோவை தெற்கு தொகுதிதான் ட்ரெண்டில் இருந்தது. கமல் வெற்றி பெறுவாரா என்ற பார்வை இந்தியா முழுவதும் எதிரணி நோக்கினார்கள் ஆனால்கமலை மற்றும் திமுக கூட்டணி கட்சி மயூரா ஜெயக்குமார் இருவரையும் வீழ்த்தி வெற்றி பெற்றார் வானதி சீனிவாசன்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது பல்வேறு வாக்குறுதிகள் தரப்பட்டது. வானதி சீனிவாசன் ட்விட்டரில் தொடர்ந்து ஆக்டிவாக இருப்பவர். வானதி அவர்களிடம் அஜித் ரசிகர் ஒருவர்,, ‘வலிமை அப்டேட் எப்ப?’ என ட்விட்டரில் கேட்டார் . அதற்கு, “நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி” என பதிலளித்திருந்தார் வானதி. அப்போது இந்த ட்வீட் வைரலாக பரவியது.
இந்த நிலையில் வலிமை அப்டேட் பற்றி வானதி சீனிவாசனிடம் ஏன் கேட்கப்பட வேண்டும் என பரவலாக பேசப்பட்டது. மேலும் அவர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில் வானதி அவர்களும் பதில் அளித்தார் தமிழகத்தின் தல அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படம் தொடர்பாக எந்த ஒரு அப்டேட்டும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து வெளியிடப்படவில்லை. நீண்ட நாட்களாக படம் குறித்த எந்த ஒரு புகைப்படமும் அல்லது தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பதால் அஜித் ரசிகர்கள் இவ்வாறு கேள்வி கேட்டு ட்ரெண்ட் ஆக்கினார்கள்.
இந்த நிலையில் வலிமை மோஷன் போஸ்டர் வெளியானது அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள். இதனை தொடர்ந்து வானதி சீனிவாசன் அஜித் வலிமை போஸ்டரை பதிவு செய்து நான் வெற்றி பெற்றவுடன் வலிமை அப்டேட் வந்து விட்டது என பதிவிட்டுள்ளார்.
வானதி சீனிவாசன்
அவர் சொல்வது வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது. எனும் தொனியில் பதிவிட்டார் இதுவும் ட்ரெண்ட் ஆனது. தனது முகநூல் பக்கத்திலும் வலிமை மோஷன் போஸ்டரை பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார் வானதி சீனிவாசன் அவர்கள். வலிமைக்கு வலிமை சேர்த்தார் வானதி அவர்கள்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















