கோவையில் வானதிசீனிவாசனின் வலிமை அப்டேட்…

வலிமை_அப்டேட்

நண்பர் ஒருவர் நேற்று போன் பண்ணினார். அவரது நண்பர் ஒருவரின் உறவினர் கோயம்புத்தூரில் இருக்கிறாராம். கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறாராம்.

வயது 44 தான்.
ஆக்ஸிஜன் லெவல் – 86.

கோயம்புத்தூர் ESI மருத்துவமனை, அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள் எனப் பல்வேறு மருத்துவமனைகளிலும் முயற்சி செய்து பார்த்திருக்கிறார்கள். இடம் கிடைக்கவில்லை. ஏதாவது உதவ முடியுமா? என்று கேட்டார்.

“அவர்களுக்குப் பொருளாதார சிக்கல். அதனால், அரசு மருத்துவமனை அல்லது ESI மருத்துவமனையில் இடம் வாங்கிக் கொடுத்தால் பரவாயில்லை. கிடைக்கவே இல்லையென்றால், தனியார் மருத்துவமனையிலாவது வாங்கிக் கொடுங்கள். உயிரைக் காப்பாற்றியாக வேண்டுமே” என்றார்.

விவரங்களை அனுப்ப சொல்லி வாங்கிக்கொண்டு, Vanathi Srinivasan அக்காவைத் தொடர்பு கொண்டேன். அப்போது நேரம் இரவு 10 மணி.

தொடர்ந்து ஒரு முக்கால் மணி நேரம் பல்வேறு விவரங்களை என்னிடம் கேட்டுக்கொண்டே, மருத்துவமனையில் இடம் வாங்குவதற்கான வேலையிலும் ஈடுபட்டிருக்கிறார் வானதி அக்கா.

சுமார் பத்தே முக்கால் மணிக்கு, “Government Hospital Dean-னிடம் பேசிவிட்டேன். அந்த Patientஐ உடனே Hospital-க்கு போக சொல்லுங்க” என்றார்.

‘சரிங்க, அக்கா’ என்றேன்.

‘Patient எப்படி போவார்?’ என்றார்.

Lockdown காலமாச்சே. வாகனங்கள் கிடைப்பது சிரமமாச்சே. அதற்கும் ஏதாவது உதவட்டுமா? எனும் தொணியில் கேட்டார்!

‘Patient-ன் உறவினர்கள் இருக்காங்க, அக்கா. அவங்க கூட்டிடட்டுப் போவாங்க’ என்றேன்.

நேற்று இரவே Patient கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுவிட்டார் என்று சற்றுமுன் அறியவந்தேன்.

இன்று காலை 7.53 மணிக்கு வானதி அக்கா ஒரு Whatsapp Message அனுப்பியிருக்கிறார் – How is he now?

வானதி அக்கா ஒரு MLA மட்டுமல்ல.
நாடாளும் பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணியின் தேசியத் தலைவர். ஆனாலும், கொஞ்சம்கூட அலட்டல் இல்லை! மாறாக, எவ்வளவு அன்பு? எவ்வளவு அக்கறை? எவ்வளவு எளிமை?

இதுதான் பாஜக! BJP is a party with difference. வேறு எந்த அரசியல் கட்சியிலும் இவ்வளவு எளிமையைப் பார்க்க முடியாது. பா.ஜ.க.வில் மட்டுமே உயர் பொறுப்பில் உள்ளவர்களிடம் கூட உதவிக் கேட்டு மிகவும் எளிதாக தொடர்புகொள்ள முடியும். அவர்களும் அவ்வளவு அக்கறையோடு முயற்சி செய்து உதவுவார்கள்.

வானதி அக்காவிடம் தேர்தல் சமயத்தில் Twitter-ல் ஒரு சகோதரர் வலிமை அப்டேட் பற்றி கேட்டிருந்தார்.
‘வலிமை அப்டேட், தேர்தல் முடிந்து சொல்கிறேன் தம்பி’ என்று பதிலளித்திருப்பார், வானதி அக்கா.
(அந்த Twitter பதிலைப் படிக்கும்போதே
வானதி அக்காவின் சிரித்த முகம் மனக்கண்ணில் தோன்றும்)

நேற்று இரவு முக்கால் மணி நேரம் முயன்று, கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை ஒருவருக்கு அரசு மருத்துவமனையில் இடம் வாங்கிக் கொடுத்து, அவரைக் காப்பாற்றியிருக்கிறாரே…


இதுதான் “வலிமை” அப்டேட்.
ஜனநாயக வலிமை அப்டேட்!
தலைமைத்துவத்தின் வலிமை அப்டேட்!

Exit mobile version